பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் தீர்வு இல்லை: மீண்டும் ஜன.15-ல் தொடர்கிறது

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, இன்று நடந்த 8-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மீ்ண்டும் ஜன.15-ல் நடக்கிறதுமத்திய அரசு, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இச்சட்டங்களை திரும்ப பெற கோரி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர், டில்லி எல்லையில்
Another round of Centre-farmer talks ends inconclusively, next meeting on Jan 15

புதுடில்லி : விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, இன்று நடந்த 8-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மீ்ண்டும் ஜன.15-ல் நடக்கிறது

மத்திய அரசு, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இச்சட்டங்களை திரும்ப பெற கோரி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


latest tamil newsபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு, இதுவரை 7 கட்ட பேச்சு நடத்தியது. இதில் எந்த சுமூக தீர்வும் எட்டவில்லை மீண்டும் ஜன. 8-ல் நடத்த இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சுமுக தீர்வு எட்டப்படாமலேயே கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து, மீண்டும் ஜன. 15-ல் தொடர, இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-202110:23:05 IST Report Abuse
SAPERE AUDE இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இரண்டு வழிகள் உண்டு. தங்களது திருத்தங்களை சட்டசபையில் வைத்து தீர விவாதித்து முடிவெடுப்பது. அல்லது உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சினைக்கு நீதி காண்பது. தலைநகர் செல்லும் சாலைகளை அடைத்து தமாஷ் செய்வது தீர்வை அளிக்காது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-ஜன-202105:31:04 IST Report Abuse
RajanRajan 😂😂😂😂😂டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி::: கடந்த 20 ஆண்டுகளாக நாம் இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை சாப்பிட்டு வருகிறோம், இது 2 ஆண்டுகளுக்கு முன்பு மோடி அவர்களால் நிறுத்தப்பட்டது, இப்போது கொரோனா காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் இப்போது ருடாலி, விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் அரங்கேற்றமாகிறது. 2005 ஆம் ஆண்டில், மன்மோகன் அரசு ஒரு ரகசிய ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் பருப்பு வகைகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தில் இருந்து பருப்பு வகைகளை இந்தியா இறக்குமதி செய்ய புதிய அரசால் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில், கனடா ஒரு பெரிய பயறு வகைகளுக்கான விவசாய பண்ணையைத் திறந்தது, அதில் பெரும்பாலாக பஞ்சாபி சீக்கியர்கள் வைக்கப்பட்டனர். அவர்களது அமைப்புகளுக்கு ஆரம்பத்தில் குருத்வாராவிடமிருந்தும் பின்னர் காலிஸ்தானியர்களிடமிருந்தும் மேற்பார்வையாளர்கள் இருந்தனர் எனவே 2007 ஆம் ஆண்டில் கனடாவில் மஞ்சள் புரட்சி என்று அழைக்கப்படும் பருப்பு வகைகள் உற்பத்தி அபரிமிதமாக செய்யப்பட்டன. அவர்களின் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் மண்டிஸின் முகவர்களாக இருந்ததால், அவர்களில் பலர் காங்கிரஸ் பஞ்சாபி குடும்பங்கள், பாட்டியாலா மகாராஜா குடும்பம் மற்றும் பாதல் குடும்பம். இன்று, மோடி விவசாயக் கொள்கை இந்த தரகர்கள் அனைவரது வருமானத்தையும் அறுவை சிகிச்சை மூலம் தடுத்துள்ளது. இப்போது இந்தியா இனி தங்கள் சந்தையாக இல்லாவிட்டால், கனடாவும் பிற நாடுகளும் இந்த பண்ணைகளில் வைத்துள்ள பணம் வீணடிக்கப்படுவது மட்டுமல்லாமல் வேலையின்மை பற்றிய கேள்வியும், இந்தியா போன்ற ஒரு பெரிய சந்தையும் தங்கள் கைகளில் இருந்து நழுவும் அபாயமும் உருவாகி உள்ளது இந்த முழு மோசடியில் காங்கிரஸ் மிகப்பெரிய தரகர். சி.டபிள்யூ.சி வி.பி மற்றும் சி.சி.பி வி.பி ஆகியவை சீனாவின் வர்த்தக மற்றும் உற்பத்தியை இந்திய பொருளாதாரம், தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் வணிக ச சாராம்சங்களுடன் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது மோடி அவர்கள், அந்த கொள்ளைக்கும்பலின் மோசடிகளை அம்பலப்படுத்தி, அவர்களின் வருமானத்தின் ஒவ்வொரு கதவையும் மூடுகிறார் .. அதனால்தான் கனடா கூட தனது மசோதாவில் நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் காலிஸ்தானிய எண்ணம் கொண்ட மக்களை இந்தியாவுக்கு அனுப்புவதாக பாஜகவை அச்சுறுத்துகிறது. காலிஸ்தான் என்பது காங்கிரஸின் உருவாக்கம் மற்றும் பாகிஸ்தானுக்கு பிடித்தது. காங்கிரசும் மற்றவர்களும் இன்னும் முழுமையாக அம்பலப்படுத்தப்படாததால் உள்துறை அமைச்சரும் இந்த பிரச்சினையை பற்றி வாய் திறக்க வில்லை. இந்த செய்தியை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் "உள்" உண்மை அறியப்படட்டும்.
Rate this:
09-ஜன-202110:25:45 IST Report Abuse
SAPERE AUDEஉண்மை காரணங்களை விவரமாக அளித்ததில் மிக்க மகிழ்ச்சி....
Rate this:
Cancel
08-ஜன-202123:38:12 IST Report Abuse
ஆரூர் ரங் சட்டத்தில் ஏற்க முடியாத அல்லது அரசியல்சட்டம் சார்ந்த விதிகள் இருந்தால் திருத்தக் கேட்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சட்டங்களையே வாபஸ் பெறக் கோருவது போகாத ஊருக்கு வழி😡. அன்னியத்👹 தூண்டுதல் என்பது நிதர்சனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X