சென்னை: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
![]()
|
இது குறித்து அமைச்சர் தெரிவித்து இருப்பதாவது: பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் மற்றும் 17 ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் 10,228 பஸ்களும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 5,993 பஸ்கள் என மொத்தம் என 16,221 சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகிறது.
அதே போன்று 14 ம் தேதி முதல் 19ம் தேதிவரையில் சென்னை திரும்புவதற்காக 8,050 பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் 3393 ஆகவும் பிற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் 5827 இயக்கப்பட உள்ளது. இதற்காக 5 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம் ,வழியாக கும்மிடிப்பூண்டி பொன்னேரி,ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும்,
இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திண்டிவனம்வழியாக திருவண்ணாமலை,சேத்துப்பட்டு, செஞ்சி, வந்தவாசி பகுதி செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி , ஆற்காடு,திருப்பத்தூர், காஞ்சிபுரம் செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, பகுதி செல்லும் பஸ்கள்
![]()
|
கோயம் பேடில் இருந்து விழுப்புரம் கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சேலம் ,ஈரோடு ,திருப்பூர் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு திருச்சி புதுக்கோட்டை,காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம்,திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் இதற்காக 13 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10 கோயம்பேடு பஸ்நிலையத்திலும் 3 தாம்பரம் சானிட்டோரியத்திலும் பூந்தமல்லியில் ஒரு மையமும் செயல்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து மற்ற பஸ் நிலையங்களுக்கு செல்வதற்காக 24 மணிநேரமும் இணைப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் www.tnstc.in, மற்றும் tnstc official app உள்ளிட்ட இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement