சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்தினமும் 10 நிமிடம்நடுத்தர வயதினர் ஒரு நாளைக்கு குறைந்தது 10 நிமிடம் உடற்பயிற்சியில் (நடை, ஓட்டம், சைக்கிளிங்) ஈடுபட்டால், வயதான காலத்தில் மூளை திறன் குறைவதை தடுக்கலாம் என அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. சராசரி 53 வயதுடைய 1600 பேரின் செயல்பாடுகளை, கடந்த 25 ஆண்டுகள் ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது. உடற்பயிற்சி மூளையின் நரம்பு

அறிவியல் ஆயிரம்
தினமும் 10 நிமிடம்

நடுத்தர வயதினர் ஒரு நாளைக்கு குறைந்தது 10 நிமிடம் உடற்பயிற்சியில் (நடை, ஓட்டம், சைக்கிளிங்) ஈடுபட்டால், வயதான காலத்தில் மூளை திறன் குறைவதை தடுக்கலாம் என அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. சராசரி 53 வயதுடைய 1600 பேரின் செயல்பாடுகளை, கடந்த 25 ஆண்டுகள் ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது. உடற்பயிற்சி மூளையின் நரம்பு மண்டலத்தை சரியாக வைத்து, அதன் திறனை பாதுகாக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது அமெரிக்க அகாடமி நியூராலஜி மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்

வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜன.,9ல் மத்திய அரசு சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 1915 ஜன., 9ம் தேதியை கவுரவிக்கும் விதமாக இந்நாளை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2000ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் இத்தினத்தில் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X