பிரதாப்கர்: உலகின் மிக அரிதான உயிரினங்களில் ஒன்றான கங்கை நதி டால்பினை, உத்தர பிரதேசத்தில் முட்டாள் இளைஞர் கும்பல் ஒன்று கட்டை மற்றும் கோடரியால் தாக்கி கொன்றது. அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் மட்டுமே காணக் கூடிய நன்னீர் டால்பின் வகைகளில் ஒன்று தான் கங்கை நதி டால்பின். இதன் மற்றொரு பிரிவு சிந்து நதி டால்பின் என அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதான உயிரினங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. மற்ற வகை டால்பின்களை போல இதுவும் தீங்கிழைக்காத ஒரு உயிரினம். ஆனால் உ.பி.,யின் பிரதாப்கர் பகுதியில் ஆற்று கால்வாயில் காணப்பட்ட இந்த டால்பினை 8-க்கு மேற்பட்ட இளைஞர் கும்பல் ஒன்று கோடரியை கொண்டு தாக்கி, கட்டையால் அடித்து கொன்றுள்ளது. டிச., 31-ல் இச்சம்பவம் நடந்துள்ளது.

கால்வாய் ஓரம் டால்பின் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்திருக்கிறது. இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். கிராமத்தினர் யாரும் நடந்த சம்பவம் பற்றி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் தான் டால்பினை கொடூரமாக தாக்கி கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அதனை வைத்து இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Such a disturbing video shared by @alok_pandey A Gangetic dolphin being brutally beaten by a group of men! It's such a rare and gentle creature, and even so, this level of brutality against any living thing is horrific. #pratapgarh #dolphin pic.twitter.com/Mqp9rkRP17
— Gargi Rawat (@GargiRawat) January 8, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE