'அப்பாடி... சரியா சொல்லிட்டாரு!'
ஈரோடு அருகே, குமாரவலசு ஊராட்சியில், தி.மு.க.,வின் மக்கள் சபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், 'கிராம சபை கூட்டம், ஆண்டுக்கு நான்கு முறை நடக்கிறது. அதாவது காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினத்தில் நடக்கும். இது அரசு மரபு' என்றார்.
அங்கிருந்த, தி.மு.க., பிரமுகர், 'அப்பாடி... ஒரு வழியாக கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை நடக்கும் என, சரியாக சொல்லிட்டாரு... கோபியில் பேசும்போது, 'ஆண்டுக்கு, மூன்று முறை' என்றார்; இங்கும் தவறாக தெரிவித்திருந்தால், 'மீம்ஸ்' போட்டு கலாய்த்திருப்பர்...'
என்றார்.அதைக் கேட்ட மற்றொருவர், 'தப்பிச்சுட்டாருன்னு வருத்தப்படுறீங்களா; இல்லை மீம்ஸ் பார்க்க முடியாதேன்னு கவலைப்படுறீங்களா...' என கேட்டதும், அந்த இடம் கலகலப்பானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE