சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மக்களை காவு வாங்கலாமா?

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மக்களை காவு வாங்கலாமா?சீனிவாசன், கண்டனுார், சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனி மனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி, கைகளை அடிக்கடி கழுவுதல் என, கொரோனா தடுப்பு வழிமுறையை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசும், சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி வருகிறது.அதே அரசு தான், டாஸ்மாக் பார், 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் செயல்படவும்


மக்களை காவு வாங்கலாமா?சீனிவாசன், கண்டனுார், சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனி மனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி, கைகளை அடிக்கடி கழுவுதல் என, கொரோனா தடுப்பு வழிமுறையை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசும்,
சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி வருகிறது.அதே அரசு தான், டாஸ்மாக் பார், 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் செயல்படவும் அனுமதி அளித்துள்ளது.
தியேட்டரில், 100 சதவீத பார்வையாளர் அனுமதி என்பதில், திரை உலகினரைத் தவிர, தமிழகத்தில் உள்ள மற்ற அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசும், இந்த அனுமதி தவறானது எனக் கூறியுள்ளது. இரண்டாவது அலை, உருமாறிய கொரோனா என, மேலை நாடுகளில் வேகமாக நோய் தொற்று பரவி வரும் நிலையில், தியேட்டருக்கு, 100 சதவீதம் பார்வையாளர் அனுமதி என்பது, நிச்சயம் பேராபத்தை விளைவிக்கும்.நம் நாட்டில், வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசு மட்டும், ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?சினிமா துறையினரின் வாழ்வாதாரத்திற்காக, தியேட்டரில், ஓர் இருக்கை இடைவெளியில், 50 சதவீத பார்வையாளர் என்பது கூட, ஏற்றுக் கொள்ளக்கூடியதே.இடைவெளியில்லாமல், குளிர்சாதன வசதியுடன், மூன்று மணி நேரம் மூடிய அறைக்குள் கூட்டம் நிறைந்திருந்தால்,
நிச்சயம் கொரோனா பரவும்.அதுவும் விஜய், சிம்பு போன்ற பெரிய நடிகர்களின் படம் எனும்போது, எதை பற்றியும் கவலைப்படாமல் இளைஞர்கள் கூட்டம், திருவிழா போன்று, தியேட்டருக்குள் முண்டியடித்து நிற்கும்.மாதந்தோறும் சுகாதாரம், உள்ளாட்சித் துறையினர், கலெக்டர்களுடன் கூட்டம் போட்டு ஆலோசனை கேட்டு, ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும் முதல்வர், தியேட்டர் விஷயத்தில் மட்டும், நடிகர் விஜய் ஆலோசனையை மட்டும் கேட்டு, இதை அறிவித்தது ஏன்?இத்தனை நாளாக மருத்துவர், செவிலியர், துப்புரவாளர் மேற்கொண்ட உழைப்பு வீணாக போவதற்கா?நடிகர்கள், தங்களின் படம் வசூலை குவிக்க வேண்டும் என்பதற்காக, ரசிகர்களின் உயிரை பணயம் வைக்கின்றனர். என்ன ஒரு சுயநலம்!மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமான பள்ளிகள் கூட, ஓராண்டாக மூடியிருக்கும் நிலையில், பெற்றோரிடம் ஒருமுறைக்கு இருமுறை கருத்து கேட்கும் தமிழக அரசு, தியேட்டர் மற்றும் பார் திறப்பு விஷயத்தில், 100 சதவீதம் ஆர்வம் காட்டுகிறதே!'நாட்டு மக்கள் நாசமாக போனால், நமக்கென்ன; சினிமா தான் முக்கியம்' என நினைக்கும் அரசியல்வாதிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.


'கயிறு திரிக்கும்' அரசியல்வாதிகள்!எஸ்.சுப்பிரமணியன்,சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தேர்தலின்போது அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி விடுவது வாடிக்கையான ஒன்று தான்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை வாரி வழங்குவதற்கு,தேர்தல் ஆணையமோ, நீதிமன்றமோ எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே, அரசியல்வாதிகளின் பலம்.மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என, தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.அவர், 'மின்னணு இல்லம், நவீன தற்சார்பு கிராமம், சூழலியல் சுகாதாரம், செழுமைக்கோடு' என, சாதாரண மக்கள் புரியாத மாதிரியான வாக்குறுதிகளை முதல் கட்டமாக வாரி வழங்கி இருக்கிறார். அவரது பேச்சு போலவே, வாக்குறுதியும் அமைந்துள்ளது.மேலும் அவர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம்' என, பொத்தாம் பொதுவாக ஒரு வாக்குறுதியை வழங்கி உள்ளார்.
ஆனால், அந்த ஊதியமானது பிரதி மாதமும் வழங்கப்படுமா அல்லது ஆண்டுக்கொரு முறையா என்பதையும், ஊதியத் தொகை எவ்வளவு என்பதையும் தெரிவிக்காமல், எச்சரிக்கையாகத் தவிர்த்து இருக்கிறார்.தமிழகத்தில், 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஆதரவற்றோர், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர்,விதவை மற்றும் மாற்றுத் திறனாளிக்கு, தற்போது மாதம்தோறும், 1,000 ரூபாய் உதவித் தொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது.ஆக, 1,000 ரூபாய்க்கு குறைவாக, இல்லத்தரசிக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது. அப்படி மாதம், 1,000 ரூபாய் ஊதியம் என நிர்ணயித்தால், ஒவ்வொரு மாதமும், 3,000 கோடி ரூபாய், தமிழக அரசு வழங்க வேண்டியது இருக்கும்.இது சாத்தியமாக, வாய்ப்பே இல்லை. இது, கமலுக்கும் தெரியும். 'கயிறு திரிப்பதும், கப்சா விடுவதும்' நம் அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை தான். தமிழக மக்களே, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி, ஓட்டளித்து விடாதீர்.


நிலுவை தொகையை இழுக்காதீர்!ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில நாட்களுக்கு முன், '100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகச்சிறப்பான பட்ஜெட்டை இந்தாண்டு தாக்கல் செய்யப் போவதாக கூறி இருந்தார்.மேலும், டிசம்பருக்கான, ஜி.எஸ்.டி., வரியாக, ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 174 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக, அவர் கூறியுள்ளார்.மக்கள் சார்பில், அவருக்கு இரு வேண்டுகோள்கள்...ஒன்று, நிதிப் பற்றாக்குறையால் திண்டாடும் தமிழகத்திற்கு, மத்திய அரசு தர வேண்டிய, ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.கடந்த, 2017-ல், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின், மாநிலத்தின் வருவாய் குறைந்து விட்டது. அதனால் தமிழக அரசு, தொடர்ந்து நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.'தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை, 12 ஆயிரத்து, 250 கோடி ரூபாயை, உடனடியாக விடுவிக்க வேண்டும்' என, பிரதமருக்கு, சில மாதங்களுக்கு முன், முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.எனவே, ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகையை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.இரண்டாவது கோரிக் கை, விலைவாசி உயர்வுக்கு மூல காரணமாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலை, ஜி.எஸ்.டி., வரி இனத்தில் சேர்க்க வேண்டும்.பல ஆண்டுகளாக அனைத்து தரப்பினரும் வலியுறுத்தும், மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும், மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜன-202108:13:23 IST Report Abuse
D.Ambujavalli மக்கள் உயிர், சமூக சுகாதாரம் எல்லாவற்றையும் பின் தள்ளும் வலிமை , டாஸ்மாக், தேர்தல், இலவச கூட்டங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு உண்டு என்பது தெரிகிறது இது அரசு , சொந்த கஜானாக்களை 9தேர்தலுக்குப் பின்) நிரப்பும்
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
09-ஜன-202107:02:07 IST Report Abuse
venkat Iyer எல்லாம் ரசிகர்களின் வாக்கு வங்கிகள் என்பதுதான் முக்கிய காரணமாக அமைகிறது. ரசிகர்கள் அப்படி ஒன்றும் முட்டாள்கள் அல்ல. 100% தியேட்டர்கள் திறந்தாலும் மக்கள் தியேட்டரை நோக்கி நிச்சயம் படை எடுக்க மாட்டார்கள். இன்றும் பல உடல் நலம் சரியில்லாத இளைஞர்கள் நிறுவனங்களுக்கு வரமுடியாமல் கொராணாவைக் காட்டி விடுப்பில் உள்ளார்கள்.எனது பிள்ளைகள் 50% திறந்த தியேட்டருக்கு செல்லக்கூடாது என்று எனக்கே அறிவுரைகள் கூறுகின்றனர். சில நிறுவனங்கள் போனஸாக தியேட்டர்களை வழங்கி வருகிறது. அதற்கு பதிலாக உணவுப் பொருளாக வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் மத்தியில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்று நிறுவனங்களும் உணவு பொருட்களை வாங்க பாஸ்கலை வழங்கி வருகிறது. விஜய் ஒரு படத்திற்கு 100 கோடி சம்பாதித்து வாழவேண்டும் என்பதற்காக மற்ற மக்கள் குறிப்பாக ரசிகர்கள் தனது உயிரை மாய்த்துக்கொள்ள தயாராக இல்லை. சினிமா தியேட்டர்கள் காத்து தான் வாங்கும். இதன் மூலம் நடிகர்கள் திறமையை இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிப்பது தடுக்கப்படும்.
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
09-ஜன-202106:51:46 IST Report Abuse
venkat Iyer ஐயா, கமலின் பேச்சு அவரது சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை கிராமப்புறங்களில் தொடர்ந்து இருக்கின்றது. அதுபோல அவருடைய தேர்தல் பிரச்சாரங்களிலும் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது கொள்கைகள் பெரியாரின் கொள்கைகள் போல இருப்பதால் இன்றைய சூழ்நிலையில் இந்து மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுபோல அவருடைய உறுதிமொழிகள் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாதது போல் தோன்றுகிறது. சினிமாவில் வெற்றி பெற பவர்கள் ஒரு சிலரே அரசியலில் வெற்றி பெறுகிறார்கள். அவர் சொந்த வாழ்க்கையிலும் சினிமாவிலும் எவ்வித சேவை மனப்பான்மை இல்லாமல் பெண்களை ஏமாற்றும் விதத்தில் செயல்பட்டு உள்ளார். இதனால் பெண்கள் ஓட்டு கிடைப்பது மிகவும் அரிதானது. அவர் 3 சதவீத ஓட்டு பெறுவது கஷ்டமான சூழ்நிலையாக அமையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X