சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வை கழற்றிவிட திட்டம்!

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வை கழற்றிவிட திட்டம்!''பதவி கிடைச்சும், சொந்தக் கட்சியில வரவேற்பு இல்லைன்னு புலம்புதாரு வே...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்தக் கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தமிழக காங்கிரஸ் பொருளாளராக, ரூபி மனோகரனை அறிவிச்சிருக்காவல்லா... குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டம்,

 டீ கடை பெஞ்ச்


'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வை கழற்றிவிட திட்டம்!


''பதவி கிடைச்சும், சொந்தக் கட்சியில வரவேற்பு இல்லைன்னு புலம்புதாரு வே...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்தக் கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழக காங்கிரஸ் பொருளாளராக, ரூபி மனோகரனை அறிவிச்சிருக்காவல்லா... குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தல்ல போட்டியிட்டு, தோத்து போனவரு வே...

''மறுபடியும், இந்தத் தொகுதிக்கு குறி வச்சிருக்காரு... பதவி கிடைச்ச கையோட, நாங்குநேரி பக்கம் பரப்பாடியில இருக்கிற காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க போயிருக்காரு வே... ஆனா, அங்கன இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அவரை தடுத்து, சிலைக்கு மாலை அணிவிக்க விடலை...

''அப்ப, இரு கோஷ்டியினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்திருக்கு வே... போலீசார், சமரசப்படுத்தி அனுப்பி விட்டிருக்காவ... இதனால, ரூபி நொந்து போய் கிடக்காரு வே...'' என்றார்,
அண்ணாச்சி.

''ஒன்றரை மாசமாகியும், இன்ஸ்பெக்டரை நியமிக்காம இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், நவம்பர் மாத கடைசியில, கோபி மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார்... மொடக்குறிச்சி ஸ்டேஷனுக்கு, புது இன்ஸ்பெக்டர் வந்ததும், அவரிடம் பொறுப்புகளை குடுத்துட்டு போயிடலாம்னு காத்திருந்தாருங்க...

''ஆனா, ஒரு மாசமாகியும் யாரும் வரலை... இதுக்கு இடையில, கோபி மதுவிலக்கு பிரிவுக்கு வேற ஆள் வந்துடக் கூடாதுன்னு, அங்க போய், 'சார்ஜ்' எடுத்துக்கிட்டாருங்க...

''ஆனாலும், மொடக்குறிச்சிக்கு புது இன்ஸ்பெக்டரை, ஒன்றரை மாசமாகியும் நியமிக்காம, சுப்புரத்தினத்தையே தொடர்ந்து பார்க்கும்படி
அதிகாரிகள் சொல்லியிருக்காங்க...

''இதுல ஏதும் சூது இருக்குமோன்னு, ஸ்டேஷன் போலீசார் சந்தேகப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சிட்டிங் எம்.எல்.ஏ.,வை கழற்றிவிட, தலைமை முடிவு பண்ணிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.

''எந்தத் தொகுதியில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''அ.தி.மு.க., சார்புல, பெரம்பலுார் எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர் தமிழ்ச்செல்வன்... 2011, 2016 தேர்தல்கள்ல, தொடர்ந்து ஜெயிச்சாரு பா... சசிகலா அண்ணி இளவரசி அண்ணன் மூலமா தான், 'சீட்' வாங்கியிருக்காரு...

''ஆரம்பத்துல, கடன் வாங்கி தேர்தல்ல நின்ன இவர், இன்னைக்கு பல கோடிகளுக்கு அதிபதின்னு கட்சிக்காரங்களே சொல்றாங்க... ஆனா, தொகுதிக்கு பெரிய அளவுல எதுவும் செய்யலையாம் பா...

''அதோட, சீரியல் நடிகை தொடர்பு, இளம்பெண்களுக்கு, 'டார்ச்சர்' கொடுத்ததுன்னு, இவர் மேல ஏகப்பட்ட புகார்கள்... அதனால, வர்ற தேர்தல்ல இவரை கழற்றி விட்டுட்டு, கான்ட்ராக்டர் எசனை பன்னீர்செல்வத்துக்கு, 'சீட்' குடுக்க, தலைமை முடிவு பண்ணியிருக்குது பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜன-202106:25:39 IST Report Abuse
D.Ambujavalli சசிகலா வெளியே வந்ததும் அவரை சந்தித்தால், காட்சி மாறிவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X