சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நாட்டு ரக விதைகளை சேகரிக்கிறேன்!

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாரம்பரிய, இயற்கை முறையில் விளைந்த செடி, கொடி, காய் கறிகளின் விதைகளை சேகரித்து, தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருவது பற்றி, விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார்: டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சுட்டு, 11 வருஷம், தனியார் கம்பெனியில் சூப்பர்வைசரா வேலை பார்த்தேன். அதுக்கு பிறகு, விவசாயத்தையே முழுநேரமா செய்ய ஆரம்பிச்சேன். நாற்பது,

சொல்கிறார்கள்

பாரம்பரிய, இயற்கை முறையில் விளைந்த செடி, கொடி, காய் கறிகளின் விதைகளை சேகரித்து, தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருவது பற்றி, விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார்: டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சுட்டு, 11 வருஷம், தனியார் கம்பெனியில் சூப்பர்வைசரா வேலை பார்த்தேன். அதுக்கு பிறகு, விவசாயத்தையே முழுநேரமா செய்ய ஆரம்பிச்சேன்.

நாற்பது, ஐம்பது வருஷத்துக்கு முன்னால, நாட்டு விதைகளோட கருவூலமாகக் கிராமங்கள் தான் இருந்துச்சு. ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றத்தால் விதைகள் பரவலாக்கம் ஆச்சு.பசுமைப் புரட்சியின் தாக்கம், உற்பத்திப் பெருக்கத்தால், விவசாயிகள் மத்தியில் நாட்டு விதைகளோட பயன்பாடு குறைஞ்சு போச்சு.அப்போ தான், நாமளே நாட்டு ரக விதைகளைச் சேகரிச்சு, பரவலாக்கம் செய்யலாம்னு முடிவு செஞ்சேன். முதலில் பச்சை நீள வெண்டை கிடைத்ததால், வெண்டை ரகச் சேகரிப்பைத் துவங்கினேன். என்னோடு தொடர்பில் உள்ள வெளியூர் விவசாயிகள், நண்பர்கள்கிட்ட சொல்லி, அந்த பகுதியில நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்து வரும் விவசாயிகளையும் தேடிப் பிடிச்சேன். ஒரு விவசாயி மூலம் அடுத்த விவசாயியோட தொடர்பு கிடைச்சது.

அவங்களோட சேமிப்பில் இருந்த விதைகளை வாங்கிச் சேகரிச்சேன். இதற்காக வாரத்துல ரெண்டு நாள் வெளியூர்களுக்குப் போயிட்டு வருவேன்.பல கிளை வெண்டை, பச்சை வெண்டை, பச்சைக்குட்டை, பச்சை நீளம், சிவப்பு, பல கிளை வெள்ளை, பல கிளை சிவப்பு, கஸ்துாரி வெண்டை, காபி வெண்டை, மலைவெண்டை, மாட்டுக்கொம்பு வெண்டை, ஆனைத்தந்த வெண்டை என, 12 வகை வெண்டை விதைகளைச் சேகரிச்சேன்.

தொடர்ந்து கத்தரி, தக்காளி, அவரை, பீர்க்கு, பாகல், பூசணி, சுரை, மொச்சை, முருங்கைன்னு காய்கறிகள், கீரைகள், சிறுதானியத்தில் பாரம்பரிய சோள ரகங்கள் என மொத்தம், 74 ரக விதைகளை மீட்டிருக்கேன். விதைச் சேகரிப்புக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களைத் தாண்டி, மக்காச்சோள விதைக்காக புனே, சுரை விதைக்காக ஆந்திரா, பீர்க்கு விதைக்காக கர்நாடகா, பூசணி விதைக்காக கேரளா பயணம் செஞ்சிருக்கேன்.

விதைகளை சேமிப்பது மட்டுமல்லாமல், பரவலாக்கமும் செய்ய ஆரம்பிச்சேன். முதலில் உள்ளூர் விவசாயிகளுக்குத் தேவைப்படும் விதைகளைக் கொடுத்தேன்; தொடர்ந்து வெளியூர் நண்பர்களுக்கும் கொடுத்தேன். நான்கு வருஷத்துல இதுவரைக்கும், 12 ஆயிரத்து, 656 பேருக்கு விதைகளை அனுப்பியிருக்கேன். வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாமல், மாணவர் விடுதிகள், ஆசிரமங்கள்லயும் என்கிட்ட காய்கறி, கீரை விதைகளைப் பெற்று, அவர்களாகவே சாகுபடி செய்து, சமையலுக்குப் பயன்படுத்தி வர்றாங்க!தொடர்புக்குசரவணக்குமார்மொபைல் போன்99949 64714

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Chennai,இந்தியா
09-ஜன-202120:42:21 IST Report Abuse
Saravanan மிக சிறந்த பணி, விருதுநகர் வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன். பாரம்பரிய சம்பா அரிசி விதை, நாட்டு காய்கறி விதைகள் நமக்கு தேவை
Rate this:
Cancel
prem TRUTH - Madurai ,இந்தியா
09-ஜன-202115:11:00 IST Report Abuse
prem  TRUTH நாங்க நீங்க சொல்றதையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்.. நீங்க செய்றது எல்லாம் சேவை இல்ல... எங்க விசை அன்னன், சோம்பு தம்பி செய்யிற சமூக சேவைக்கு மேலயா நீங்க செய்ய போறீங்க ... அவுங்க போதும் எங்களுக்கு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X