பொது செய்தி

இந்தியா

இழுபறி: எட்டாம் சுற்று பேச்சிலும் தீர்வு இல்லை: விவசாயிகள் பிடிவாதம்

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (22+ 4)
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய அரசு -- விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நேற்று நடந்த, எட்டாம் சுற்று பேச்சில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. 'புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்ட களத்தில் இருந்து வீடு திரும்புவோம்; இல்லையெனில் போராட்டம் தொடரும்' என, விவசாய சங்கத்தினர் திட்டவட்டமாக
எட்டாம் சுற்று பேச்சு, தீர்வு இல்லை, இழுபறி, கோரிக்கை, விவசாயிகள், பிடிவாதம், வேளாண் சட்டம்

புதுடில்லி:டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய அரசு -- விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நேற்று நடந்த, எட்டாம் சுற்று பேச்சில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. 'புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்ட களத்தில் இருந்து வீடு திரும்புவோம்; இல்லையெனில் போராட்டம் தொடரும்' என, விவசாய சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மத்திய அரசு, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, கடந்த ஆண்டு செப்டம்பரில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 41 விவசாய சங்கத்தினர், டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தோல்வி



கடும் குளிர் மற்றும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு மாதத்திற்கும் மேலாக, போராட்டம் தொடர்கிறது. போராட்டத்துக்கு தீர்வு காண, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசு பல்வேறு சுற்று பேச்சு நடத்தியது.'புதிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தயார்' என, மத்திய அரசு தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த விவசாயிகள், மூன்று புதிய சட்டங்களையும் திரும்ப பெற வலுயுறுத்தி வருகின்றனர். கடந்த, 4ல் நடந்த ஏழாம் சுற்று பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போவதாக, விவசாய சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு -- விவசாய சங்க பிரதிநிதிகள் இடையிலான, எட்டாம் சுற்று பேச்சு, டில்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதில், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், பஞ்சாபை சேர்ந்த பா.ஜ., எம்.பி.,யும், வர்த்தகத்துறை இணை அமைச்சருமான சோம் பர்காஷ் ஆகியோர் பங்கேற்றனர். விவசாயிகள் தரப்பில், 41 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.புதிய வேளாண் சட்டங்களுக்கு, நாடு முழுதும் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதால், நாட்டின் நலன் கருதி, போராட்டத்தை கைவிடும்படியும், புதிய சட்டங்களில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவுகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாவும், அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.




போராட்டம்



'புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே, போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புவோம். இல்லையெனில் போராட்டம் தொடரும்' என, விவசாய சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.கூட்டம் துவங்கி, ஒரு மணி நேரத்திற்கு பிறகு, தங்களுக்குள் ஆலோசனை நடத்துவதற்காக, மத்திய அமைச்சர்கள், கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.




விசாரணை



அப்போதும், விவசாய பிரதிநிதிகள், அரங்கைவிட்டு வெளியேறாமல், 'செய் அல்லது செத்துமடி' என, எழுதப்பட்ட காகிதத்தை தங்கள் கைகளில் ஏந்தியபடி, மதிய உணவு கூட அருந்தாமல், கூட்ட அரங்கில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.எட்டாம் சுற்று பேச்சிலும், சுமுக தீர்வு எட்டப்படாததை அடுத்து, பேச்சு தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.'அப்போது, புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகள் கூறும் குறைகளை தாண்டி, அதன் சட்டப்பூர்வமான தன்மையை உச்ச நீதிமன்றம் ஆராயக்கூடும்' என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த சுற்று பேச்சு, வரும், 15ல் நடக்க வாய்ப்புள்ளது.




'ஆன்லைன்' பிரசாரம்



விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாபைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை, காங்., பொது செயலர், பிரியங்கா நேற்று சந்தித்து பேசினார்.''விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, புதிய சட்டங்களை திரும்ப பெறுவதை தவிர, மத்திய அரசுக்கு வேறு வழியில்லை,'' என்றார்.

போராட்டம் குறித்து, காங்., - எம்.பி., ராகுல், சமூகவலைதளத்தில், நேற்று குறிப்பிட்டதாவது:தன் பணக்கார நண்பர்களுக்கு உதவுவதற்காக, விவசாயிகளுக்கு பிரதமர் மோடி, துரோகம் இழைத்துவிட்டார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்., தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, காங்., தலைவர்கள் பலரும், தங்கள், 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில், விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




அமித் ஷா -- தோமர் சந்திப்பு



விவசாய சங்க பிரதிநிதிகளுடன், எட்டாம் சுற்று பேச்சை நேற்று துவங்குவதற்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சந்தித்தார். அவருடன், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பின் போது,பேசப்பட்ட விபரம் குறித்து, தகவல் வெளியிடப்படவில்லை.


சாகும் வரை போராட்டம்



நீதிமன்றத்தை நாட விரும்பவில்லை. சாகும் வரை போராட தயாராக உள்ளோம். நாளை மறுநாள் கூடி விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.ஹன்னான் மொல்லா
விவசாய சங்க தலைவர்




மாற்று தீர்வு வேண்டும்



புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து, அதற்கு மாற்று தீர்வுகளை விவசாய சங்கத்தினர் தெரிவிக்காத வரை, பிரச்னைக்கு முடிவு ஏற்படாது. வரும், 15ல் நடக்கும் அடுத்த சுற்று பேச்சில், மாற்று வழிகளை விவசாயிகள் தெரிவிப்பர் என எதிர்பார்க்கிறேன்.
நரேந்திர சிங் தோமர்
மத்திய வேளாண் அமைச்சர், பா.ஜ.,




சமரசம் கிடையாது



விவசாயிகளின் உறுதியை மத்திய அரசு சோதிக்கிறது. நாங்கள் தலை வணங்க மாட்டோம். சட்டங்களை திரும்ப பெறும் கோரிக்கையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. அடுத்த சுற்று பேச்சிலும் தீர்வு எட்டப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்
விவசாய சங்க தலைவர்


Advertisement




வாசகர் கருத்து (22+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - chennai,இந்தியா
16-ஜன-202114:27:10 IST Report Abuse
raja விவசாயம் பற்றி தெரியாமல் பேசும் பலர் இப்போ வாங்கும் விவசாய பொருட்களுக்கு பத்து மடங்கு கொடுத்து கார்ப்பரேட் கிட்ட வாங்க வேண்டிய நிலமை அலுவலகம் சென்று வேலை செய்பவர்க்கு விரைவில் வரும் அப்போ விவசாயம் மற்றும் விவசாயி போராட்டம் பற்றி... தெரியும்,,,
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
09-ஜன-202119:38:15 IST Report Abuse
visu இந்தியாவில் தனி மெஜாரியுடன் உள்ள அரசு ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது . அதில் ஆட்சேபம் இருப்பின் உச்ச கோர்ட்டில் கேஸ் போட்டு முடிவு காணவும் . அதை விடுத்து போராட்டம் என்று இடையூறு செய்வது சரியா அதர்க்கு எதேர்க்கு தேர்தல் . இதில் சீக்கியர்கள் தவிர வேறு யாரையும் காண முடியவில்லை. நாளை 10000. திருடர்கள் ஒன்று சேர்ந்து திருட்டு குற்றமில்லை என்று சட்டம் வேண்டும் என்று போராடினால் என்ன ஆகவும்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
09-ஜன-202116:25:12 IST Report Abuse
J.Isaac காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடித்தது போல், விவசாயிகளிடம் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X