பார்லிமென்ட் தாக்குதல்: டிரம்ப் முதலைக் கண்ணீர்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க பார்லிமென்டில் நடந்த வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ''வன்முறையில் ஈடுபட்டவர்கள், நம் நாட்டை பிரதிபலிப்பவர்கள் இல்லை,'' என, கூறியுள்ளார். அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக

வாஷிங்டன்:அமெரிக்க பார்லிமென்டில் நடந்த வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ''வன்முறையில் ஈடுபட்டவர்கள், நம் நாட்டை பிரதிபலிப்பவர்கள் இல்லை,'' என, கூறியுள்ளார்.

அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வந்தார். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதற்கிடையே, ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிக்க, அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழுக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. பார்லிமென்ட் அமைந்துள்ள, 'கேப்பிடோல்' கட்டடத்தின் முன், டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி, வரலாறு காணாத வன்முறையில் ஈடுபட்டனர். இதில், நான்கு பேர் இறந்தனர்.

அமெரிக்காவில் நடந்த இந்த வன்முறைக்கு, பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு சான்றிதழ் வழங்கியது. வரும், 20ல், அமெரிக்காவின், 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இந்த வன்முறையை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளனஇந்நிலையில், இந்த வன்முறைக்கு, அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சட்டம், ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்கும் தேசம், அமெரிக்கா. பார்லி மென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அமெரிக்க ஜனநாயகத்தின் வேர்களை அறுத்துள்ளனர். வன்முறை மற்றும் நாசகார செயல்களில் ஈடுபட்டவர்கள், நம் நாட்டை பிரதிபலிப்பவர்கள் இல்லை.

சட்டமீறலில் ஈடுபட்டவர்கள், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.இந்த வன்முறையை, மற்ற அமெரிக்க மக்களை போல், நானும் கண்டிக்கிறேன். வன்முறையை தடுத்து, பார்லிமென்ட் அமைந்துள்ள கட்டடத்ததை காப்பாற்ற, போலீசாருக்கு உத்தரவிட்டேன். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.இந்த வன்முறைக்கு, அமெரிக்காவில் செயல்படும், ஹிந்து அமெரிக்கர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

'உள்நாட்டு பயங்கரவாதிகள்'அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த வன்முறை குறித்து, ஜோ பைடன் கூறியதாவது:இது ஒரு மோசமான நிகழ்வு. தாக்குதல் நடத்தியவர்கள் கலகக் காரர்கள், கிளர்ச்சியாளர்கள், உள்நாட்டு பயங்கரவாதிகள். ஜனநாயகத்தின் குரல்வளையை வன்முறையால் நெரிக்க, டிரம்ப் முயற்சித்தார் என்பது தான் உண்மை. இவ்வாறு, அவர் கூறினார். டிரம்ப் பதவி நீக்கம்?அமெரிக்க அதிபராக, வரும், 20ம் தேதி வரை, டிரம்ப் நீடிக்க உள்ளார்.

எனினும், பார்லிமென்ட் வளாகத்தில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அவரை பதவி நீககம் செய்வது பற்றி, எம்.பி.,க்கள் ஆலோசித்து வருகின்றனர். வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகளும், இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி கூறுகையில், ''அமெரிக்க ஜனநாயகம், தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது. அதிபர் டிரம்பின் செயலுக்கு, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும். இது தொடர்பான சாதகமான பதிலை, துணை அதிபரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

இந்நிலையில், இன்னும், 10 நாட்களே பதவியில் இருக்க உள்ள அதிபர் டிரம்ப், எச் - 1பி விசாக்களுக்காக தேர்வு செய்யும் நடைமுறையில், சில மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி, கம்ப்யூட்டர் லாட்டரி வாயிலாக, எச் - 1பி விசாக்கள் வழங்கும் நடைமுறைக்கு பதிலாக, சம்பளம் மற்றும் திறமை அடிப்படையில், விசாக்கள் வழங்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.


போலீஸ் அதிகாரி ராஜினாமாஅமெரிக்க பார்லிமென்டில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று, பார்லி., பொறுப்பு போலீஸ் அதிகாரி ஸ்டீவன் சுண்ட் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தில், 'பார்லிமென்ட் போலீஸ் பொறுப்பு அதிகாரியாக பணியாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பை, பெரிய கவுரவமாக கருதுகிறேன். எனினும், நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X