நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சி லில், இந்தியாவுக்கு மூன்று குழுக்களின் தலைமை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக, சமீபத்தில் இந்தியா பொறுப்பேற்றது.
இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பை வகிக்க உள்ள இந்தியாவுக்கு, மூன்று குழுக்களின் தலைமை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து, ஐ.நா., விற்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:தலிபான் தடைக் குழு, பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் லிபியா தடைக் குழு ஆகியவற்றின் தலைமை பொறுப்பு, இந்தியா வுக்கு வழங்கப் பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆப்கனில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டி, அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதே இந்தியாவின் நோக்கம். அதற்கு வலுசேர்க்கும் விதத்தில், தற்போது முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, இந்தியா, 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அப்போது, பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிக்காவைச் சேர்ந்த, லிபியாவில் அமைதியை ஏற்படுத்த, உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில், லிபியா தடைக் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE