பொது செய்தி

இந்தியா

சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தவளக்குப்பம் சுற்றுசூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தில் வேளாண் களப் பணிகளை மேற்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள், கிராமங்களில் நேரடி ஆய்வு மற்றும் களப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.இதன் ஒருபகுதியாக, தவளக்குப்பத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை

புதுச்சேரி : தவளக்குப்பம் சுற்றுசூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தில் வேளாண் களப் பணிகளை மேற்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள், கிராமங்களில் நேரடி ஆய்வு மற்றும் களப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.இதன் ஒருபகுதியாக, தவளக்குப்பத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மையத்துடன் இணைந்து மரம் நடுதல், காளான் வளர்ப்பு பயிற்சி, இயற்கை வேளாண்மை போன்ற களப் பணிகளில் ஈடுபட்டனர். அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவை, மையத் தலைவர் கணேஷ் துவக்கி வைத்து பேசினார்.மாணவி சாந்தி வரவேற்றார். உழவர்கரை நகராட்சி கமிஷனர் கந்தசாமி பங்கேற்று, களப்பணியில் சிறந்து விளங்கிய மாணவி அஸ்வினி, மாணவன் ஜெயசூரியா ஆகியோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். வேளாண் கல்லுாரி இணை பேராசிரியர் ஆனந்தகுமார் வாழ்த்தி பேசினார். மாணவர் நிர்மல்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாணவிகள் அனுவைஷ்ணவி, நித்யஸ்ரீ மற்றும் மாணவர் திவாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X