புதுச்சேரி : அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் கவியரங்கம், உரையரங்கம், விருதளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
சங்க புதுச்சேரி கிளை அவைத் தலைவர் ஏழுமலை வரவேற்றார். இணைச் செயலாளர் அரங்க முருகையன் நோக்கவுரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் ராமானுஜம் தலைமை தாங்கினார்.புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சம்பத் பங்கேற்று விருதுகள் வழங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி முதல்வர் சந்திரசேகரனுக்கு கல்வி செம்மல் விருதும், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய முன்னாள் பேராசிரியர் மாதவனுக்கு சைவ நெறி இலக்கிய செம்மல் விருதும், கடலுார் உலகத் திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரனுக்கு குறள்நெறிச் செம்மல் விருதும், புதுச்சேரி பல்கலைக்கழக நுாலகர் சங்கர சுப்ரமணியனுக்கு நுாலக செம்மல் விருதும் வழங்கப்பட்டது.
சென்னை திரைப்பட இசையமைப்பாளர் காந்திதாசன் தலைமையில் கொரோனாவை விரட்டி பொங்கலை வரவேற்போம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.கோவலன், பழனியம்மாள், சிவா, செல்வம், பைரவி, மாணிக்கம், சுமித்ரா ஆகியோர் கவிதை வாசித்தனர்.பின்னர், நாட்டின் நரம்பு விவசாயி என்ற தலைப்பில் உரையரங்கம் நடந்தது. மயிலம் தமிழ்க் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, கடலுார் அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் ராஜா ஆகியோர் பேசினர். சங்க பொருளாளர் குணசேகர் நன்றி கூறினார். செயலாளர் கண்ணன் தொகுத்து வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE