பொது செய்தி

இந்தியா

சொத்து விபரங்களை சமர்ப்பிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு உத்தரவு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுடில்லி:அசையா சொத்து விபரங்களை, ஜன., 31க்குள் சமர்ப்பிக்கும்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், 5,000க்கும் அதிகமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் பெயரில் உள்ள அசையா சொத்துக்களின் விபரங்கள்,

புதுடில்லி:அசையா சொத்து விபரங்களை, ஜன., 31க்குள் சமர்ப்பிக்கும்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், 5,000க்கும் அதிகமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் பெயரில் உள்ள அசையா சொத்துக்களின் விபரங்கள், சொத்துக்களை அடமானம் வைத்து பெற்றுள்ள கடன் விபரங்கள் ஆகியவற்றை, வரும், 31க்குள் தெரிவிக்க வேண்டும்.

இல்லாவிடில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சொத்து விபரங்களை, 'ஆன்லைன்' வழியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தாக்கல் செய்ய வசதியாக, மத்திய பணியாளர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஜன., 31 வரை மட்டுமே, இந்த வசதி அமலில் இருக்கும் இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X