சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் ஊராட்சியில் தி.மு.க., மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் பாரி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி ஜெயராமன், இளைஞரணி கார்த்திகேயன், இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், மகளிரணி மலர்விழி, ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் பழனி மனோகரன் ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.புவனகிரி எம்.எல்.ஏ., சரவணன் அ.தி.மு.க., ஆட்சியின் ஊழல் மற்றும் அவல நிலை குறித்து பேசினார்.
மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தற்போது அ.தி.மு.க., அரசு கொள்ளை அடிப்பதும், பணத்தை சுருட்டுவதும், செயல்படாத திட்டங்களை வகுத்து கமிஷன் பெறுவது என பல்வேறு ஊழல்களை செய்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வைத் தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE