பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் சிறப்பான பணி சித்தா மருத்துவர்களுக்கு சான்றிதழ்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த சித்தா மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடலுார் மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், கடலுார் கூத்தப்பாக்கத்தில், 4வது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடந்தது.மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ் பாபு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த சித்தா மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடலுார் மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், கடலுார் கூத்தப்பாக்கத்தில், 4வது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடந்தது.மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். அரசு தலைமை மருத்துவமனை சித்தா உதவி மருத்துவ அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் ராஜகுமாரன் வாழ்த்திப் பேசினார்.சிதம்பரம் அரசு மருத்துவமனை சித்தா உதவி மருத்துவ அலுவலர் அர்ஜூனன் கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

விழாவில், கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.அரசு மருத்துவமனை ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலர் கணேஷ்பாபு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X