காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க கலெக்டர் அர்ஜீன்சர்மா உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:காரைக்கால் மாவட்டத்தில் அரசு அறிவுறுத்த கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கட்டுப்பாடு களுடன் வெளியில் செல்கின்றனர். கடந்த 10 மாதங்களாக இயங்காத நிலையில் திரையங்குகளை 50 சதவீதம் இருக்கைகள் கொண்டு திறக்க மத்திய அரசு அனுமதியளித்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளை 50 சதவீதம் இருக்கைகள் கொண்டு சமூக இடைவெளி முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE