கடலுார் : என்.எல்.சி.,யில் ஐ.டி.ஐ., அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு நிறுவனத்தில் பணி வழங்க வேண்டும் என தி.மு.க., முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ., அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் குறிப்பாக பிட்டர் பிரிவில் பயிற்சி முடித்தவர்களுக்கு பாய்லர் பிட்டர் என்ற சான்று தரப்படுகிறது. இதனால், அவர்கள் வேறெங்கும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் 1994ல் இருந்து இதுவரை பணி வழங்குவதை கைவிட்டதால் 8,000 பேருக்கும் மேற்பட்டோர் நிரந்தர வேலை இல்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்
.மேலும், இந்நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்தவர்களும் என்.எல்.சி.,யில் அப்ரண்டிஸ் முடித்துள்ளனர்.இவர்களை உடனடியாக சீனியாரிட்டி அடிப்படையில் பணியில் அமர்த்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE