பாலத்தில் மீன் வியாபாரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தில் மீன் வியாபாரம்

Added : ஜன 08, 2021
Share
புவனகிரி : புவனகிரி புதிய பாலத்தில் மீன் வண்டிகளை நிறுத்தி மொத்த விற்பனை செய்வதால் போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. புவனகிரி புதிய பாலத்தின் வழியாக புதுச்சேரி, திண்டிவனம், சென்னை, விருத்தாசலம், சேலம், குறிஞ்சிப்பாடி, வடலுார் நெய்வேலி மார்க்கமாக தினசரி பஸ், கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.எப்போதும் பிசியாக உள்ள இந்த பாலத்தில்

புவனகிரி : புவனகிரி புதிய பாலத்தில் மீன் வண்டிகளை நிறுத்தி மொத்த விற்பனை செய்வதால் போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

புவனகிரி புதிய பாலத்தின் வழியாக புதுச்சேரி, திண்டிவனம், சென்னை, விருத்தாசலம், சேலம், குறிஞ்சிப்பாடி, வடலுார் நெய்வேலி மார்க்கமாக தினசரி பஸ், கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.எப்போதும் பிசியாக உள்ள இந்த பாலத்தில் தினமும் அதிகாலையில் இரு பக்கமுகம் மீன் வேன்களை நிறுத்தி மீன்களை இறக்குவதும், அங்கு மொத்த வியாபாரம் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது.இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையிலேயே இறைச்சி கழிவு நீரை ஊற்றிச்செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.

கழிவுகளை உண்ண அப்பகுதியில் உள்ள நாய்கள் குவிவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X