பொது செய்தி

தமிழ்நாடு

5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.கொரோனா பாதிப்பைத் தடுக்க, 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நேற்று நடந்தது. கடலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கடலுார் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை, வடூர் மற்றும் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.கொரோனா பாதிப்பைத் தடுக்க, 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நேற்று நடந்தது.

கடலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கடலுார் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை, வடூர் மற்றும் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்டது.கடலுாரில் ஒத்திகையை துவக்கி வைத்த கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கூறுகையில், 'முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ பணியாளர்கள், முன்னணி களப்பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ள 50 வயதுக்கு ட்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க 26 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த இடங்களில், பதிவு செய்யப்பட்டுள்ள 8,546 மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது' என்றார்.நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, டாக்டர் பரிமேலழகன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X