கடலுார் : மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்து வைப்பதற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.கட்டடப்பணிகளை கலெக்டர் சந்திரசேகர சகாமுரி பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், 'தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 5.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,493 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் மேல்தளம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவு உறுதி செய்யும் இயந்திரம் இருப்பு வைக்கப்பட உள்ளது' என்றார்.ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாபு, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE