நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ரயில்வே கேட் தண்டவாள பகுதி சாலையை சீரமைக்கக்கோரி நிலைய அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் ஆலை ரோடு ரயில்வே கேட் வழியாக கீழ்அருங்குணம், நத்தம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு கரும்பு அரவை சமயத்தில் தினமும் ஏராளமான மாட்டு வண்டிகள் செல்லும்.ரயில்வே கேட்டைக் கடக்கும் தண்டவாளப் பகுதி குண்டும், குழியுமாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் கேட்டைக் கடக்க சிரமம் அடைகின்றன.இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து, நுகர்வோர் சங்கத் தலைவர் குமரவேல் ரயில் நிலைய அலுவலரிடம் தண்டவாள பகுதியை சீரமைக்கக்கோரி மனு கொடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE