சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த புடையூரில் பயறு வகை உற்பத்திற்கான உற்பத்தியாளர் குழு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆராய்ச்சி நிலைய வேளாண் பேராசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.கொள்ளிடம் உப வடிநில திட்ட பொறுப்பு அதிகாரி வேளாண் விஞ்ஞானி அரிசுதன் திட்டத்தின் நோக்கம் குறித்தும், நீர்வளத் திட்டம் மற்றும் பயறு வகைகளை அதிகரிப்பது குறித்தும் விளக்கினார்.வேளாண் பேராசிரியர் விஜயராகவன், பயிர் பூச்சியல் உதவி பேராசிரியர் மகாலிங்கம், பயிர் நோயியல் உதவி பேராசிரியர் செந்தில்ராஜா ஆகியோர் பயறு வகைகளின் உற்பத்தி மற்றும் பயிர் செய்யும் முறை குறித்து பேசினர்.
கிராமத்தில் விவசாயிகளை கூட்டாக சேர்த்து பயறு வகைகளை அதிகரிப்பதற்காக 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.தொழில்நுட்ப வேளாண் உதவியாளர் துரை பாண்டி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE