சென்னை:தமிழகத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில், 85.73 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, ஏழு பாலங்களை, முதல்வர் பழனிசாமி., வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டத்தில், திருச்செங்கோடு- அரியானுார் சாலையில், 45 கோடி ரூபாயில், பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், விருதுநகர்,துாத்துக்குடி, புதுக்கோட்டை, தேனி, கோவை, சேலம் மாவட்டங்களில், 40.73 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இப்பாலங்களை, முதல்வர் பழனிசாமி., திறந்து வைத்தார். அத்துடன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களின்பயன்பாட்டிற்காக, தொழில்நுட்பங்கள் மற்றும் துறையின் அனைத்து விபரங்கள் அடங்கிய,தொழில் நுட்ப கையேடை, முதல்வர் வெளியிட்டார்.பொதுப் பணித் துறையின் கீழ் செயல்படும், நீர்வள ஆதாரத் துறை சார்பில், மயிலாடுதுறை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில், 24.78 கோடி ரூபாயில், நீரொழுங்கி, அணைக்கட்டு, தடுப்பணைகள் கட்டும் பணிக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
கொரோனா பெருந்தொற்றால், கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி, பொருளாதார ரீதியாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, முதன் முறையாக, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, அரசு
உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 5.94 லட்சம் ஆண் தொழிலாளர்களுக்கு, வேட்டி, அங்கவஸ்திரம்; 6.75 லட்சம் பெண் தொழிலாளர்களுக்கு புடவை வழங்கப்படுகிறது. அத்துடன், 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ சிறு பருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியவை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, 94.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நல வாரிய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு
வழங்கும் பணியை, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி., துவக்கி
வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE