சென்னை:விஜய் நடித்துள்ள, மாஸ்டர் படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விஜய், விஜய்சேதுபதி நடித்துள்ள, மாஸ்டர் படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி, 13ம் தேதி வெளியாகிறது. படத் தயாரிப்பு நிறுவனமான, 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தியேட்டர், தொலைக்காட்சி, இணையதளங்கள்மற்றும் மின்னணு முறையில், மாஸ்டர் படத்தை வெளியிடும் உரிமை, எங்களுக்கு உள்ளது. 'கேபிள் மற்றும் இன்டர்நெட்' சேவையில் உள்ள பலரும், சினிமா படங்களை பதிவு செய்து வெளியிடுகின்றனர்.
குறைந்த விலையில், பொது மக்களுக்கும் வழங்குகின்றனர். இதனால், எங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.எனவே, இணையதளங்களில் சட்டவிரோதமாக, மாஸ்டர் படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும். எங்களுக்கு உரிய திரைப்பட உரிமையை மீறும் இணையதளங்களை முடக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிசி.வி.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார்.மாஸ்டர் படத்தை இணையதளங்களிலும், கேபிள், 'டிவி'க்களிலும் வெளியிட, நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE