பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்பிற்காக தி.மு.க., பிரமுகர் நாடகம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை: போலீஸ் பாதுகாப்பிற்காக, ரவுடிகளை, 'செட்--டப்' செய்து நாடகம் ஆடிய, தி.மு.க., பிரமுகரின் குட்டு வெளியானது. இது தொடர்பாக, ஆறு பேரை கைது செய்த போலீசார், கண்ணன் என்பவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த, பாடியநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மற்றும் சோழவரம் ஒன்றிய துணைத்

ஊத்துக்கோட்டை: போலீஸ் பாதுகாப்பிற்காக, ரவுடிகளை, 'செட்--டப்' செய்து நாடகம் ஆடிய, தி.மு.க., பிரமுகரின் குட்டு வெளியானது. இது தொடர்பாக, ஆறு பேரை கைது செய்த போலீசார், கண்ணன் என்பவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த, பாடியநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மற்றும் சோழவரம் ஒன்றிய துணைத் தலைவர். இவரது சகோதரர் கண்ணன், 46. தி.மு.க., பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.கடந்த மாதம், 27ம் தேதி, இவர், தன் காரில், பெரியபாளையம் வழியே கன்னிகைப்பேர் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர், இரண்டு பைக்குகளில் வந்து, இவரது காரை மடக்கி, கண்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.அவர்களிடம் இருந்து தப்பித்த கண்ணன் மற்றும் அவரது கார் ஓட்டுனர், இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி, போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் சிலரை விசாரித்து வந்தனர். அதில், வக்கீல் ராஜா மற்றும் மாதவரம் லியோவிவேக், 30, அயனாவரம் பாலாஜி, 30, ஐ.சி.எப். யுவராஜ், 40, கொளத்துார் அரிகரன், சக்திவேல், 23, என்பது தெரியவந்தது.அவர்களை விசாரித்த தில், கண்ணன், தனக்கு போலீஸ் பாதுகாப்பிற்காக மேற்கண்ட நபர்களை வைத்து ஒரு நாடகம் ஆடிய தகவல் கிடைத்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீசார் ஆறு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கண்ணனிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X