அம்மாவும், பொண்ணும் ஒரே மாதிரி டிரஸ் செய்வதை விட, கியூட்டான விஷயம் எதுவுமில்லை. நீங்கள் தேர்வு செய்யும் ஆடைக்கு பொருந்தும்வகையில், மகளின் ஆடையை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். பிறந்தது முதல் ஐந்துவயது வரையுள்ள குழந்தைகளுக்கு, உங்கள் ஆடை மெட்டீரியலில், கவுன்கள், டாப் வித் ஸ்கர்ட்ஆடைகள் பொருத்தமாக இருக்கும்.இதோ சில ஐடியாக்கள்!ஆடை ஒரே மாதிரி இல்லாவிட்டாலும், வண்ணங்களை மட்டும் மிக்ஸ் மேட்ச் செய்து அணியலாம். அதாவது, உங்கள் ஆடையில் பச்சை அதிகமாகவும், நீலம் குறைவாகவும் இருந்தால், உங்கள் குழந்தையின் ஆடையில் அதே நீலம் அதிகமாகவும், பச்சை குறைவாகவும் இருக்கும்படி ஆடைகளை தேர்வு செய்யலாம். இந்த கலர் காம்பினேஷனில் அம்மா, குழந்தை இருவரும் தனியாக தெரிவீர்கள்.கம்பர்டபுள் ஆடையான சுடிதாரை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் பொண்ணுக்கும் தாராளமாக சுடிதாரையே செலக்ட் செய்யுங்கள்.டிசைன், நிறம் ஒரே மாதிரியாக இருக்கும்படி உங்கள் சுடிதார் மெட்டீரியலிலேயே, குழந்தைக்கும் ஆடை தைத்து கொள்ளலாம். டாப்ஸ் மற்றும் ஒரே மாதிரி துப்பட்டா மற்றும் பேன்ட், இருவரும் வெவ்வெறு நிறங்களிலும் அணியலாம்.பொங்கலுக்கேற்ப பாரம்பரியமாக சேலையை அணிய வேண்டும் என விரும்பினால், மகளுக்கு பாவாடை, சட்டையை தேர்வு செய்யலாம். உங்கள் சேலை டிசைனில், பாவாடையும், பிளவுஸ் டிசைனில், சட்டையும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். கான்ட்ராஸ்ட் லுக்கிற்கு, பிளவுசின் நிறத்தில் பாவாடையையும், சேலையின் நிறத்தில் சட்டையையும் அமைக்கலாம்.கொஞ்சம் வெஸ்டர்ன் லுக்கில், கவுன் தேர்வு செய்தீர்கள் எனில், எளிதாக குழந்தைக்கும் கவுனை செலக்ட் செய்யலாம். அம்மாக்கள் லாங் கவுனும் குழந்தைகளுக்கு கொஞ்சம் ஷார்ட் ஆக, லேயர் கவுன், ஸ்லீவ்லெஸ் அல்லது 'பப்' ஸ்லீவ் போன்ற டிசைன்களை சேர்த்துக் கொள்ளலாம், உங்கள் ஆடையின் நிறத்திலேயே வடிவமைக்கப்பட்ட பாபாசூட், பினோபர் போன்ற ஆடைகளையும் மேட்ச் செய்யலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE