உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஒன்பது பள்ளியைச் சேர்ந்த, 1,016 மாணவ - மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் நேற்று வழங்கப்பட்டது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின், விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள, ஒன்பது அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.இதில், உத்திரமேரூர், பெருநகர், மானாம்பதி, களியாம்பூண்டி, திருப்புலிவனம் உள்ளிட்ட ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த, மொத்தம், 1,016 மாணவ - மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE