கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ரேடிசன்புளூ ஓட்டலில், கோ - கிளாம் என்ற நவநாகரிக ஆடை மற்றும் அணிகலன்கள் கண்காட்சி நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், சிறப்பு விற்பனை நடக்கிறது.இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் ஸ்பெஷல் அண்ட் லேட்டஸ்ட் டிசைன் ஆடை ரகங்களை, இந்த கண்காட்சியில் வாங்கலாம். பல்வேறு ஜவுளி விற்பனையாளர்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.இங்கு பட்டு, காட்டன், சிந்தடிக் மற்றும் பேன்சி சேலைகள், எம்பிராய்டு ஓர்க் சேலைகள் என, ஏராளமான டிசைன்களில் உள்ளன. சுடிதார், சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் மெட்டீரியல்கள் உள்ளன. பேன்சி ஜூவல்லரி, டெரக்கோட்டா மற்றும் சில்வர் ஜூவல்லரிகள் அழகு சாதனப்பொருட்கள், மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. அனைத்து ஆடைகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில் சலுகை வழங்கப்படுகிறது.கண்காட்சியின் நிர்வாக இயக்குனர், ஹீனா ராகுல் கூறுகையில், ''கோவையில் கிடைக்காத, வாடிக்கையாளர்கள் வாங்க நினைக்கும், பிற மாநில வெரைட்டிகள் இங்கு கிடைக்கிறது என்பதுதான், இதன் ஸ்பெஷல். விலையும் குறைவு,'' என்றார். காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி, நாளை நிறைவு பெறுகிறது. அனுமதி இலவசம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE