சென்னை: சென்னையில் ரேஷன் கடை ஊழியரிடம், 5 லட்சம் ரூபாய் பறித்து தப்பிய, பெண்கள் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடு துறையைச் சேர்ந்தவர் பாஸ்கர், 44; ரேஷன் கடை சூப்பர்வைசர்.இவர், சென்னை, கோயம்பேடு, சாஸ்திரி நகர் உட்பட, இரண்டு ரேஷன் கடைகளில் பணிபுரிகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், பொங்கல் பண்டிகை பரிசு தொகைக்கான, 8 லட்சம் ரூபாய் இருந்த பையுடன், கோயம்பேடிற்கு சென்றார்.கடத்தல்அங்குள்ள, 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தியுள்ளார். பின், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார். அப்போது, இரண்டு பெண்கள், பாஸ்கரை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். இதற்கு, பாஸ்கர் மறுத்து உள்ளார்.திடீரென அந்த பெண்களில் ஒருவர், 'இந்த நபர், தன்னை இடித்துவிட்டதாக' கூச்சல் போட்டுள்ளார். பாஸ்கருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்கள், 'உன் மீது, போலீசில் பாலியல் புகார் அளிப்போம்' என, மிரட்டியுள்ளனர்.இதற்கிடையே, அங்கு ஒரு ஆட்டோ வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய நபர், 'எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்' என, அந்த பெண்ணுடன் சேர்ந்து, பாஸ்கரை ஆட்டோவில் பாரிமுனைக்கு கடத்தி உள்ளனர்.போதையில் இருந்த பாஸ்கரை மிரட்டிய அப்பெண்கள், பூந்தமல்லி சாலையில், அடுத்தடுத்து, மூன்று இடங்களில் உள்ள, ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, பணம் எடுக்கச் சொல்லி, 4,000 ரூபாய் பறித்து உள்ளனர். பணம் எடுக்க, பாஸ்கர் ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்லும்போது, பணம் இருந்த பையை, ஆட்டோவில் விட்டு சென்றுள்ளார்.விசாரணைஅப்போது, அந்த பையில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த பெண்களும், ஆட்டோ ஓட்டுனரும், பாஸ்கரிடம் நைசாக பேச்சு கொடுத்து, 3 லட்சம் ரூபாயை, 'ஆட்டை' போட்டு, இரவு, 10:30 மணிக்கு, பாரிமுனை இந்தியன் வங்கி அருகில் இறக்கிவிட்டு தப்பினர்.பையில், 3 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதை அறிந்த பாஸ்கர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். வழிப்பறி கும்பல் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE