நேற்று ஏனிந்த மாற்றம்!  மேட்டுப்பாளையம் சாலையில்  வாகன நெரிசலால் வாக்குவாதம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், பாலம் பணிக்காக, போக்குவரத்து மாற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்று வழித்தடம் மிகவும் குறுகலாக இருப்பதால், மேட்டுப்பாளையம் ரோட்டிலேயே ஆட்டோ மற்றும் கார்களை இயக்க அனுமதிக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.கோவை- - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம்
 நேற்று ஏனிந்த மாற்றம்!   மேட்டுப்பாளையம் சாலையில்  வாகன நெரிசலால் வாக்குவாதம்

கோவை:கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், பாலம் பணிக்காக, போக்குவரத்து மாற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்று வழித்தடம் மிகவும் குறுகலாக இருப்பதால், மேட்டுப்பாளையம் ரோட்டிலேயே ஆட்டோ மற்றும் கார்களை இயக்க அனுமதிக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை- - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் ராமன கவுண்டர் பூவாத்தாள் திருமண மண்டபம் வரை, 1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது.இவ்வழியில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர, மற்ற வாகனங்களை, மாற்று வழியில் அனுமதிக்க, போலீசார் திட்டமிட்டனர். திட்டத்தின் படி, மேட்டுப்பாளையம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சாய்பாபா கோவில் - தடாகம் ரோடு - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி.புதுார் - கணுவாய் - அப்பநாயக்கன்பாளையம் - துடியலுார் அல்லது கே.என்.ஜி.புதுார் - ஜி.என்., மில்ஸ் ஆகிய வழித்தடங்களில் செல்ல வேண்டும்.மாற்று வழியில் மல்லுக்கட்டு!மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள், வெள்ளக்கிணறு - உருமாண்டம்பாளையம், உடையம்பாளையம், மணியக்காரம்பாளையம் - கணபதி - காந்திபுரம் அல்லது மணியகாரன்பாளையம் - சங்கனுார் - எருக் கம்பெனி - காந்திபுரம் ஆகிய வழித்தடங்களில் செல்ல வேண்டும் என, போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகை வைத்தனர்.
அதன் படி, நேற்று வாகனங்களை மாற்று வழியில் அனுப்பினர். மாற்று வழியும் மிகவும் குறுகலாக இருந்ததால், வாகன ஓட்டிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரோட்டில், கார்கள் செல்ல அனுமதித்தனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து, மேட்டுப்பாளையம் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்பு மற்றும் பெயர் பலகைகளை அகற்றினால், ஆட்டோ மற்றும் கார்கள் எளிதாகச் செல்லலாம்.பஸ் மற்றும் கனரக வாகனங்களை, மாற்று வழித்தடத்தில் அனுப்ப வேண்டும். இவ்வழியிலேயே பலரும், அலுவலகம், கடைகள், நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அவர்களை, ஊரைச் சுற்றிச் செல்லுமாறு கூறுவது ஏற்புடையதல்ல.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நஞ்சப்பா ரோட்டிலும்...நஞ்சப்பா ரோட்டை ஒரு வழியாக்கியதும், மாற்று வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல், மீண்டும் இரு வழியாக்கப்பட்டது. தற்போது, காட்டூருக்கு செல்ல முடியாத வகையில், மையத்தடுப்பு வைத்துள்ளனர். அதனால், அவிநாசி ரோடு சென்று, 'யூ - டேர்ன்' எடுக்கின்றனர். பாலத்தில் இருந்தும், பாலத்துக்கு கீழிருந்தும் வரும் வாகனங்கள், முட்டி மோதுகின்றன. எந்தவொரு மாற்றம் செய்வதற்கு முன்பும், ஆழமாக யோசித்து செயல்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X