பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்தை மழுங்கடிக்காதீர்: விவசாயிகள் கோரிக்கை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மணலி: 'கடைசி, 1 ஏக்கர் விவசாய நிலம் இருக்கும் வரை, கடப்பாக்கம் ஏரி தண்ணீர் வேண்டும். விவசாயத்தை மழுங்கடிக்காதீர்கள்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, மணலி, 16வது வார்டில், 135 ஏக்கரில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை, சுற்றுவட்டார மக்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.ஆசிய வளர்ச்சி வங்கியின், ஜி.இ.எப்., நிதியான, 55.34 கோடி ரூபாயில்,

மணலி: 'கடைசி, 1 ஏக்கர் விவசாய நிலம் இருக்கும் வரை, கடப்பாக்கம் ஏரி தண்ணீர் வேண்டும். விவசாயத்தை மழுங்கடிக்காதீர்கள்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி, மணலி, 16வது வார்டில், 135 ஏக்கரில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை, சுற்றுவட்டார மக்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.ஆசிய வளர்ச்சி வங்கியின், ஜி.இ.எப்., நிதியான, 55.34 கோடி ரூபாயில், மாநகராட்சி சார்பில், ஏரியை ஆழப்படுத்தி, சுவர், நடைபாதை உள்ளிட்டவை அமைத்து, மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இது குறித்து, சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்ற, கருத்து கேட்பு கூட்டம், நேற்று, கடப்பாக்கம் ஏரி கரையில் அமைந்துள்ள, தீராதி கடலியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.இதில், மாநகராட்சி அதிகாரிகள், திட்ட அதிகாரிகள் பங்கேற்று, திட்டம் குறித்து விளக்கினர்.கூட்டத்தில், விவசாயிகள் கூறியதாவது:சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த, பல ஏக்கர் விவசாய நிலம், ஏரி தண்ணீரால் பாசன வசதி பெறுகிறது. தவிர, கால்நடைகள், ஏரி தண்ணீரை நம்பி வாழ்கின்றன.ஏரியை ஆழப்படுத்தினால், தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேறாது. அப்போது, மின் மோட்டர் மூலம், தண்ணீரை இறைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.தாங்கு சுவர் அமைத்து விட்டால், கால்நடைகள் ஏரி தண்ணீரை பருகுவதில் சிக்கல் ஏற்படும். திட்டம் குறித்த தங்கள் சந்தேகங்களுக்கு, அதிகாரிகள் தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை.

கொரோனா காலகட்டத்தில், பலரது வாழ்வாதாரத்திற்கு, கன்னியம்மன்பேட்டை உள்ளிட்ட கிராம பயிர்கள் தான் வித்திட்டது.இங்கிருந்து, விளைப் பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று, சில்லரையாக விற்று, வாழ்ந்தனர்.அதற்கு, இந்த ஏரி தண்ணீரே முக்கிய காரணம். விவசாயத்தை மழுங்கடிக்கும், இத்திட்டத்தை முடிந்தவரை இங்கு, செயல்படுத்த வேண்டாம். கடைசி, 1 ஏக்கர் விவசாய நிலம் இருக்கும் வரை, ஏரி நீரை பயன்படுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X