சென்னை:பதவி உயர்வு அளித்தும், அதற்கான சம்பள உயர்வு அளிக்காத தாசில்தாருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், வேலாயுதபுரத்தில் உள்ள, ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதியில், வார்டனாக பணி யாற்றி வருபவர், சரவணன். இவருக்கு, தேர்வு நிலை வார்டனாக, 2019ல், பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கான சம்பள உயர்வை, தென்காசி ஆதிதிராவிட நல தாசில்தார் கிருஷ்ணவேல் வழங்கவில்லை.இது, மனித உரிமை மீறல் என, மாநில மனித உரிமை கள் ஆணையத்தில், சரவணன் வழக்கு தொடர்ந்தார்.அதேபோல, தென்காசி மாவட்டம், ரெட்டியார்பட்டி ஆதிதிராவிட ஆண்கள் விடுதியில் பணியாற்றும், இக்னேசி என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, எந்த தடையும் பெறப்படவில்லை.எனவே, மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுப்படி, அவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்காதது, கடமை தவறிய செயல். இதற்காக, மனுதாரர்கள் இருவருக்கும், தமிழக அரசு, தலா, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இந்த தொகையை, தாசில்தார் கிருஷ்ணவேலிடம் இருந்து, அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். மனுதாரர்கள் இருவருக்கும் பதவி உயர்வு அடிப்படையில், சம்பளம் நிர்ணயித்து, அதற்கான பணப்பலன்களை வழங்க வேண்டும். தாசில்தார் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE