சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச போஸ்டர்களை கிழித்தெறிந்த போலீசார்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
தாம்பரம்: ஜி.எஸ்.டி., சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த, ஆபாச சினிமா போஸ்டர்களை, தாம்பரம் போலீசார் கிழித்தெறிந்தனர்.ஊரடங்கு தளர்வை அடுத்து, அனைத்து திரையரங்குகளும், 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி, நவ., 11ம் தேதி முதல் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்தது.எனினும், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கிடைக்காததால், பெரிய நடிகர்களின் படங்கள், திரையிடப்படாமல் இருந்தன.இதைத்தொடர்ந்து,

தாம்பரம்: ஜி.எஸ்.டி., சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த, ஆபாச சினிமா போஸ்டர்களை, தாம்பரம் போலீசார் கிழித்தெறிந்தனர்.ஊரடங்கு தளர்வை அடுத்து, அனைத்து திரையரங்குகளும், 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி, நவ., 11ம் தேதி முதல் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்தது.எனினும், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கிடைக்காததால், பெரிய நடிகர்களின் படங்கள், திரையிடப்படாமல் இருந்தன.இதைத்தொடர்ந்து, 4ம் தேதி முதல், திரையரங்குகளில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; இதை, உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.இந்நிலையில், திருட்டு அழகி என்ற படத்தின் 'டிரைலர்' நேற்று வெளியானதையடுத்து, அதை, விளம்பரப்படுத்தும் விதமாக, ஆபாசமான வகையில், விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.நேற்று காலை முதல், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் என, புறநகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும், ஜி.எஸ்.டி., சாலையோரம், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.முகம் சுளிக்க வைத்த இந்த போஸ்டர்கள் குறித்து தகவலறிந்த, தாம்பரம் போலீசார், ஆபாச போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X