சென்னை: 'அப்பல்லோ' மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடந்தது.சென்னை, ஆயிரம் விளக்கு, அப்பல்லோ மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை, நேற்று நடந்தது. அதில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனைகளின் குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.இதுகுறித்து, துணை தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியதாவது:அப்பல்லோ மருத்துவமனை, கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு, தடுப்பூசி அளிப்பதன் வாயிலாக, மக்களுக்கு சேவை செய்கிறோம். இந்த சேவை வாயிலாக, அப்பல்லோ மருத்துவமனை, அரசுடன் இணைந்து, நாட்டு மக்களை, பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பான ஆண்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி கூறியதாவது:நாட்டின் மிகப்பெரிய சுகாதார நிறுவனமான, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், கொரோனா தொற்றுக்கு எதிரான, தேசத்தின் போராட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறது. நாட்டு மக்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான வழியை, தடுப்பூசி வாயிலாக ஏற்படுத்த முடியும்.அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடுவது, சர்வதேச சவால்.அரசுடன் இணைந்து, பாதுகாப்பான முறையில், அப்பல்லோ மருத்துவமனை, மக்களுக்கு தடுப்பூசி சேவையை அளிக்க உள்ளது. மேலும், மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE