சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.25 லட்சம் திருடியவரை நைய புடைத்த 'பார்' ஊழியர்கள்

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 08, 2021
Share
Advertisement
மதுரவாயல்: மதுரவாயலில் உள்ள, 'பார்' ஒன்றில், கல்லா பெட்டியை உடைத்து, 1.25 லட்சம் ரூபாய் திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும், 'டாஸ்மாக்' கடையில், பிரவீன் குமார் என்பவர் 'பார்' நடத்தி வருகிறார். ஐந்துக்கும் மேற்பட்ட, ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.நேற்று இரவு, வியாபாரம் முடிந்து கல்லா பெட்டியில், 1.25 லட்சம் ரூபாய்

மதுரவாயல்: மதுரவாயலில் உள்ள, 'பார்' ஒன்றில், கல்லா பெட்டியை உடைத்து, 1.25 லட்சம் ரூபாய் திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும், 'டாஸ்மாக்' கடையில், பிரவீன் குமார் என்பவர் 'பார்' நடத்தி வருகிறார். ஐந்துக்கும் மேற்பட்ட, ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.நேற்று இரவு, வியாபாரம் முடிந்து கல்லா பெட்டியில், 1.25 லட்சம் ரூபாய் வைத்து, ஊழியர்கள் பக்கத்து அறையில் துாங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவில், கல்லாப்பெட்டி உடைக்கும் சத்தம் கேட்டதையடுத்து, ஊழியர்கள் எழுந்து பார்த்தனர்.மர்ம நபர் ஒருவர், கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி, தப்ப முயன்றது தெரிய வந்தது. சுதாரித்த ஊழியர்கள், அந்த நபரை பிடித்து, சரமாரியாக தாக்கி, மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்டவர், மதுரவாயலைச் சேர்ந்த பாலன், 24, என, தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X