கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை அலுவலக பணியாளர்களுக்கு, பர்பார்மன்ஸ் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான நேர்காணலை, நமது நாளிதழ் செய்தி காரணமாக, பல்கலை நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணிபுரியும், அலுவலக பணியாளர்களுக்கு, இது வரை அவர்கள் மேற்கொண்டு வந்த பணியின் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்பட்டது.ஆனால் தற்போது பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கு அவர்களது பணிக்காலத்தில் மேற்கொண்ட பணிவிபர (பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் ) அறிக்கையை, பல்கலை நிர்வாகம் கேட்கிறது.இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த செய்தி, நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து, இன்று நடப்பதாக இருந்த, பர்பார்மன்ஸ் அடிப்படையிலான பதவி உயர்வு நேர்காணலை, தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பல்கலை தெரிவித்துள்ளது.இதற்கு, பல்கலை ஆசிரியர் அல்லாத அமைச்சுப்பணியாளர்கள், தமிழ்நாடு பல்கலை கழக கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE