பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று என்.டி.சி., மில்கள் திறப்பு! தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் ஒன்று உட்பட, தென்மண்டலத்தில் நான்கு என்.டி.சி., மில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு(என்.டி.சி.,) சொந்தமாக, கோவையில் ஐந்து, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் தலா ஒரு மில் என மொத்தம் ஏழு மில்கள் உள்ளன. இந்த மில்களில், 5,000க்கும் மேற்பட்டோர்

கோவை:கோவையில் ஒன்று உட்பட, தென்மண்டலத்தில் நான்கு என்.டி.சி., மில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு(என்.டி.சி.,) சொந்தமாக, கோவையில் ஐந்து, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் தலா ஒரு மில் என மொத்தம் ஏழு மில்கள் உள்ளன. இந்த மில்களில், 5,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.கொரோனா காரணமாக மில்கள் இயக்கம் கடந்தாண்டு, மார்ச், 23ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு மே 18ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகளை இயக்க அறிவித்தும், மில்கள் திறக்கப்படவில்லை.தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து கோவையில் கடந்த நவ.,ல் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், தீபாவளிக்கு போனஸ், 50 சதவீத சம்பளம் வழங்கும் உடன்பாடும் எட்டியது. மில்களை திறக்கவும் கோரிக்கை வலுத்தது.இந்நிலையில், கடந்த, 1ம் தேதி முதல் கோவையில் ஒரு மில்(ரங்கவிலாஸ் மில்) உட்பட தமிழகத்தில் மூன்று, கேரளாவில் ஒன்றும் என தென்மண்டலத்தில் நான்கு மில்கள், மீண்டும் இயங்கத் துவங்கியதால், தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.எச்.எம்.எஸ்., பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் ராஜாமணி கூறுகையில், ''மில்கள் திறப்பால் தேங்கி இருந்த, ரூ.150 கோடி மதிப்பிலான நுால், பஞ்சு கடந்தாண்டு இறுதியில் விற்பனையாகின. 'மார்க்கெட்' தற்போது நன்றாகவே இருப்பதால், மீதமுள்ள மில்களும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்,'' என்றார்.திறக்க நடவடிக்கை!தென்மண்டல என்.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எட்டு மாதங்களுக்கு மேலாக மில்கள் திறக்கப்படாததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு மில் திறக்க, 15 முதல், 20 கோடி ரூபாய் தேவைப்படும். நிதி தொடர்பாக டில்லியில் ஆலோசனை நடந்து வருகிறது. மீதமுள்ள மில்களும் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X