நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள, என்னவெல்லாம் செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறார், மனநல மருத்துவர் பூங்கொடி பாலா. சோஷியல் மீடியாவில் உபயோகிக்கும் நேரத்தை, முடிந்த வரை குறைத்துக் கொள்ளவும் அன்றாடம் குறைந்தபட்சம், 30 நிமிடங்கள் ஒதுக்கி, மனதுக்கு நெருக்கமான ஒரு பொழுது போக்கு பழக்கத்தை செய்து வரவும். அது விளையாட்டாகவோ, இசையாகவோ, வரைகலையாகவோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இரவு சீக்கிரம் படுக்கச்சென்று, காலையில் சீக்கிரம் எழுந்து பழகவும் தினமும் அதிகாலை அல்லது அந்திமாலை வேளையில், அதிகபட்சம் 40 நிமிடங்கள், நடை பயிற்சி செல்லவும். பின் குளித்துவிட்டு, அன்றாட வேலையில் ஈடுபடவும்தினமும் காலை, மாலையில் தியானம் செய்யவும்மனதில் தோன்றும் விஷயங்களை, டைரி ஒன்றில் எழுதவும். இதன்மூலம், மனம் லேசாகும்நடந்து முடிந்த, நடக்கப்போகிற பிரச்னைகள் குறித்து யோசிக்காமல், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தவும் நீங்கள் நெருக்கமாக உணரும் நண்பரிடமோ, குடும்பத்தாரிடமோ உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் மனதுக்கு மகிழ்ச்சிதரும் இசையை கேட்பதற்கென, தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி கொள்ளவும் உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை மூன்று வேளையும் சாப்பிடவும். பாஸ்ட் புட் வகைகளை முழுமையாக தவிர்ப்பது நல்லது. எந்தச் சூழலிலும், உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கான தனித்துவத்தை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE