பொது செய்தி

தமிழ்நாடு

கன மழையால் 'பிளந்தது' தார் ரோடு! ஒப்பந்ததாரர் மீது ஆக் ஷன் எடுப்பாரா கமிஷனர்?

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை, திருச்சி ரோட்டில் இருந்து, ஜி.வி., ரெசிடென்சி வரை, பெர்க்ஸ் ஆர்ச் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும்போது, கடந்தாண்டு ஜூலையில் துவங்கியது; ஆறு மாதமாகியும், பெர்க்ஸ் ஸ்கூல் வரையே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாய் பதித்த இடங்களில் முழுமையாக மண் கொட்டி, ரோட்டை சமன்படுத்தாமல், ஒப்பந்ததாரர்கள், 'அசால்ட்'டாக விட்டு விட்டனர்.கடந்த, 6ம் தேதி இரவு பெய்த மழையால்,
 கன மழையால் 'பிளந்தது' தார் ரோடு! ஒப்பந்ததாரர் மீது ஆக் ஷன் எடுப்பாரா கமிஷனர்?

கோவை:கோவை, திருச்சி ரோட்டில் இருந்து, ஜி.வி., ரெசிடென்சி வரை, பெர்க்ஸ் ஆர்ச் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும்போது, கடந்தாண்டு ஜூலையில் துவங்கியது; ஆறு மாதமாகியும், பெர்க்ஸ் ஸ்கூல் வரையே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாய் பதித்த இடங்களில் முழுமையாக மண் கொட்டி, ரோட்டை சமன்படுத்தாமல், ஒப்பந்ததாரர்கள், 'அசால்ட்'டாக விட்டு விட்டனர்.கடந்த, 6ம் தேதி இரவு பெய்த மழையால், சாலை புதை குழியானது. அவ்வழியாக வந்த வாகனங்கள், அக்குழியில் சிக்கின. நேற்று முன்தினம், கார் மாட்டிக்கொண்டது. நேற்று கான்கிரீட் ரோடு ஏற்றிச் சென்ற லாரி சிக்கியது. குழியில் மண் கொட்டும் வேலையை, மாநகராட்சி ஊழியர்கள் ஆமை வேகத்தில் செய்து வருகின்றனர்.இதற்கு மாற்றாக, வி.ஜி.எம்., மருத்துவமனை ரோடு வழியாக, திருச்சி ரோட்டுக்கு வரலாம்; இதுவும் தரமின்றி போடப்பட்டிருப்பது நேற்று வெளிச்சத்துக்கு வந்தது. மழைக்கு தாக்குப்பிடிக்காமல், மண் அரிப்பு ஏற்பட்டு, ரோடு பிளந்தது; அந்தளவுக்கு தரமின்றி ரோடு போடப்பட்டுள்ளது. அவ்வழித்தடத்தில், ஆளை விழுங்கும் வகையில் பள்ளமே உருவாகியிருக்கிறது.இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை. இரவு நேரங்களில் இவ்வழியாகச் சென்று, விபத்தில் சிக்கி, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வழியிலும், பெர்க்ஸ் ஆர்ச் ரோட்டிலும் மறைப்பு ஏற்படுத்தி, வாகனங்கள், மாற்று வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.'பிளாக் லிஸ்ட்'டில்சேர்க்கணும்!மாநகராட்சி சார்பில், எந்தவொரு வேலை செய்தாலும், அதன் தரத்தை உறுதி செய்ய, உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து, 'ரிப்போர்ட்' செய்ய வேண்டும். அதன் பிறகே, பில் தொகை வழங்க வேண்டும். பிளவு ஏற்பட்டுள்ள, மருத்துவமனை ரோடு எப்போது போடப்பட்டது என்பதையும், ஒப்பந்ததாரர் யார் என்பதையும் கண்டறிந்து, 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்க்க வேண்டும்.வைப்புத்தொகையை, பறிமுதல் செய்ய வேண்டும். மாநகராட்சி சார்பில், இனி வேறெந்த பணியும் அந்த ஒப்பந்ததாரருக்கு வழங்கக் கூடாது என்கிற முடிவை, கமிஷனர் குமாரவேல் பாண்டியன் துணிச்சலாக எடுத்து, செயல்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜன-202102:55:23 IST Report Abuse
தல புராணம் கமிஷனருக்கு கமிஷன் அடிப்பது, அதை மினிஸ்டரோடு பங்கு போடுவது மட்டும் தான் வேலை.. எந்த உலகத்திலும் இல்லாத வகையில் ஒரு நகருக்கு ஒண்ணுக்கு பக்கத்திலே இன்னொண்ணுன்னு ரெண்டு பாதாள சாக்கடை திட்டம் போட்டு 20,000 கோடி ஆட்டையை போட்ட ஒரே ஊரு மணியான கோயம்புத்தூரு தான்.. அப்படி போட்டும் சாக்கடை எல்லாம் கோவை ராமநாதபுரம், போத்தனுர் எல்லையில் மொத்தமாக பொட்டல் காட்டில் விட்டு அப்படியே நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X