கோவை:கோவையில், 'மதிநிறை மார்கழி' என்ற இசை நாட்டிய விழா, பீளமேடு மணிமகாலில் நேற்று நடந்தது.குருகுலம் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் மற்றும் மணிமகால் சார்பில், நடக்கும் இவ்விழாவுக்கு இன்ஸ்டிடியூட் இயக்குனர் மயிலிறகு சுந்தரராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:திருப்பாவை அருளிய ஆண்டாளுக்கு, செய்யும் பூஜையாக இந்த விழா நடக்கிறது. ஆழ்வார்கள் எல்லாம் இறைவனின் திருவடியை அடையதான் விரும்பினர்.ஆண்டாள் மட்டும்தான் இறைவனை பூமிக்கு அழைத்து, தன்னோடு இருக்கும் படி வேண்டினாள். இறைவனை மெய் உருகப்பாடி, மெய் மறந்து வாழ்ந்தவள் ஆண்டாள்.ஆண்டாளின் தன்னம்பிக்கைக்கு, இணையாக யாரும் இல்லை. அதனால் இந்த விழா இசை, நாட்டியம் பயின்ற மாணவிகள் தங்களின் கலைத்திறனை, இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விதமாகவும், மக்கள் பக்தி இசையை கேட்கும் வாய்ப்பாகவும் நடக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார். முதல் நாள் நிகழ்ச்சியாக, வீணை இசை கலைஞர் வசந்தாவின் வீணை இசை, ஸ்ரீநாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதநாட்டியம், கோவை சங்கராபரணம் இசைப்பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினர்களாக, சிங்கை முத்து, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE