பொது செய்தி

தமிழ்நாடு

எளிதானது உழவு, நடவு, அறுவடை: விவசாயிகளுக்கு கைகொடுக்கும் இயந்திரங்கள்

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஒரு காலத்தில், விவசாயம் செய்வதென்றால், மாடுகளை பூட்டி ஏர் உழுவது, ஆட்களை கொண்டு நடவு செய்வது, அறுவடைக்கு குறைந்தது, 40 பணியாட்களை தேட வேண்டியதும் இருந்தது. நெற்கதிர்களை அறுத்து, அவற்றை கட்டாக கட்டி, நெற்களங்களில் குவித்து, அதிலிருந்து நெல் மணிகளாக பிரித்தெடுப்பதற்குள், விவசாயிகளுக்கு பெரும்பாடாய் இருக்கும்.தற்போது இயந்திரங்கள் வருகையால், பல மணி நேரம் செய்ய வேண்டிய

ஒரு காலத்தில், விவசாயம் செய்வதென்றால், மாடுகளை பூட்டி ஏர் உழுவது, ஆட்களை கொண்டு நடவு செய்வது, அறுவடைக்கு குறைந்தது, 40 பணியாட்களை தேட வேண்டியதும் இருந்தது. நெற்கதிர்களை அறுத்து, அவற்றை கட்டாக கட்டி, நெற்களங்களில் குவித்து, அதிலிருந்து நெல் மணிகளாக பிரித்தெடுப்பதற்குள், விவசாயிகளுக்கு பெரும்பாடாய் இருக்கும்.

தற்போது இயந்திரங்கள் வருகையால், பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகள், ஒரு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. உழவு, நடவு, அறுவடை என, இயந்திரங்கள் வருகையால் விவசாயிகள் சிரமமின்றி விவசாயம் செய்து வருகின்றனர். இயந்திரங்கள் வருகையால் விவசாய தொழிலுக்கு தேவையான ஆட்கள் பற்றாக்குறை பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துள்ளது.


உழவுlatest tamil newsமாடுகளை கொண்டு நாள் முழுதும், ஒன்றிரண்டு ஏக்கர் விளைநிலங்களை உழுத நிலையில், தற்போது, டிராக்டர்களின் உதவியுடன், ஒரு மணி நேரத்திற்கு, 2 ஏக்கர் நிலத்தை உழவு செய்ய முடிகிறது. டிராக்டர்களில் பல்வேறு வகையான கலப்பைகள் உள்ளதால், கடினமான மண் பகுதியைகூட எளிதாக உழுதுவிட முடிகிறது.


நடவுlatest tamil newsமாடுகளுக்கு பதிலாக, டிராக்டர்கள் மூலம், உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நடவு செய்யவும், இயந்திரங்கள் வந்துவிட்டன. 1 ஏக்கர் விவசாய நிலத்தை நேர்த்தியாகவும், சீரான இடைவெளியிலும், ஒரு மணி நேரத்தில் நட்டு விடுகின்றன. இதற்கு குறைவான விதை நெல் தான் செலவாகிறது.இதுவே கைநடவு முறை என்றால், நாற்றாங்கால் பறிப்பு, நடவு என, ஏக்கருக்கு, 15 பேர் தேவை. இயந்திர நடவு எளிதாக இருப்பதாலும், நடவு செய்ய ஆட்களை தேடி அலைய வேண்டியதும் இல்லை.


அறுவடைlatest tamil newsஅறுவடை செய்ய, பிரத்யேக இயந்திரங்கள் வந்துவிட்டன. ஒரு மணி நேரத்தில், 1 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்கின்றன. நெற்கதிர்களை உள்ளிழுக்கும் அறுவடை இயந்திரம், நெல் தனியாக, வைக்கோல் தனியாக பிரித்துவிடுகிறது.துாசி, பதர், உள்ளிட்டவை வெளியேற்றப்பட்டு, சுத்தமான நெல்மணிகள் தனியாக சேமிப்பு தொட்டிக்கு வந்துவிடுகிறது. சேமிப்பு தொட்டி நிரம்பியவுடன், தயாராக நிற்கும் டிராக்டர்கள் அல்லது நெற்களத்தில் கொட்டப்படுகிறது. அவை உடனடியாக மூட்டை கட்டப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அறுவடை இயந்திரம், விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கின்றனர், விவசாயிகள். இல்லையெனில், 1 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்து, அதை நெல்மணிகளாக தனியாக பிரிப்பதற்கு குறைந்தது, 40 பணியாட்கள் தேவை என்கின்றனர்.


வைக்கோல் சேகரிப்பு
latest tamil news
அறுவடை இயந்திரங்களில் இருந்து வெளிவரும் வைக்கோல் துாள், விளைநிலங்களிலேயே எரிக்கப்பட்டது. தற்போது அதற்கும் தீர்வு கிடைத்து, வைக்கோல்களை வாரி சுருட்டி பேல்களாக மாற்றும் இயந்திரங்கள் வந்துவிட்டன. தற்போது வைக்கோல் வீணாவதும் தடுக்கப்பட்டு, ஒரு பேல், 120 முதல், 150 ரூபாய் வரை விற்பனையாகி, லாபமும் ஈட்டித் தருகிறது.


latest tamil news

இயந்திரம் இல்லாவிட்டால் சிரமம்சில ஆண்டுகளாக அறுவடை பணிகளுக்கு முற்றிலும் ஆட்கள் கிடைப்பதில்லை. இயந்திரம் மூலம் தான் அறுவடை செய்கிறோம். இதன் மூலம், 1 ஏக்கரை ஒரு மணி நேரத்தில் அறுவடை செய்துவிடமுடிகிறது. ஆட்கள் பற்றாக்குறை உள்ள இந்த சூழலில், இயந்திரங்கள் இல்லையென்றால், விவசாயம் செய்வதே கடினம்.

ஏ.லோகநாதன்,

விவசாயி,

கிருஷ்ணாபுரம் கிராமம், பொன்னேரி.


விவசாயிகளின் நண்பன்கிராமங்களில் விவசாய பணிக்கு வந்த தொழிலாளர்கள் தற்போது, 100 நாள் பணிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஆட்கள் தட்டுப்பாடு உள்ளது. இயந்திரங்கள் வருகையால் நடவு, அறுவடை பணிகள் எளிதாகி உள்ளது. விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இயந்திரங்கள் இருப்பதால் தான், எங்களால் தடையின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

பி.ஜி.கணபதி,

விவசாயி பனப்பாக்கம் கிராமம், பொன்னேரி.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
09-ஜன-202122:00:18 IST Report Abuse
பஞ்ச்மணி இன்னாது நம்ப ஊரு ஆளுங்க அல்லாரும் வேறு நாடு / கிரகத்துக்கு பொய் போய்ட்டாங்களா ?? ஹி ஹி அரசாங்கம் குடுக்கற இலவச ஐட்டங்களை வாங்கி சந்தோசமா விட்டம் பாத்துட்டு இருக்கணுவோ பொதுவா சென்னைக்கு வர்ற ஆளுங்கோ பொங்கலுக்கு ஊருக்கோ பொய் 1 வாரம் கழிச்சு மறுபடியும் திரும்புவான் ஆனா இப்போ நல்ல லம்ப் அமௌன்ட் வந்திருக்கு கேக்கவே வேணாம் இந்த இலவசம் ஒழியாத வரை நம்ப ஊரு இப்படி தான் இருக்கும் சும்மா பழங்கால பெருமை பேசி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்
Rate this:
Cancel
rao -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-202120:35:31 IST Report Abuse
rao With all the latest technologies introduced in farming, still farming and farmers continues there tirades at the govt for not doing anything for farmingcommunitys.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X