அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை: எம்.எல்.ஏ.,அர்ஜூனன் கோரிக்கை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கோவை:பட்டியலின தலித்களை தாக்க துாண்டியவர் மற்றும் தாக்கிய தி.மு.க.,வினர் மீதும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2ம் தேதி தேவராய புரத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில், தி.மு.க.,வினர் தலித் பெண்ணை தாக்கி விரட்டினர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ., கார்த்திக்

கோவை:பட்டியலின தலித்களை தாக்க துாண்டியவர் மற்றும் தாக்கிய தி.மு.க.,வினர் மீதும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2ம் தேதி தேவராய புரத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில், தி.மு.க.,வினர் தலித் பெண்ணை தாக்கி விரட்டினர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ., கார்த்திக் மற்றும் கடும் தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேள்விக்கு பதில் கூற முடியாமல், அமைச்சர் வேலுமணி மீது குறைகூறி. எம்.எல்.ஏ., கார்த்திக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது தொகுதியில், எந்தவொரு வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை. அ.தி.மு.க., அரசு கடந்த, 50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சி திட்டங்களை, ஐந்தே ஆண்டுகளில் கோவைக்கு தந்துள்ளது. அமைச்சர் வேலுமணி மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அக்கட்சி செயல்படுகிறது. தரம் தாழ்ந்த நடவடிக்கைகளுக்காக மக்களால், தி.மு.க., முற்றிலும் புறக்கணிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X