தி.மு.க.,வினர் மீது வழக்கு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
தி.மு.க., சார்பில், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் 'விடியலை நோக்கி' எனும் பொதுக்கூட்டம் நடந்தது. கொரோனாவால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய தி.மு.க., நிர்வாகிகள், 30 பேர் மீது போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்தனர். பைக் திருடியவருக்கு சிறைகோவை சுங்கம் பை-பாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 37. கடந்த

தி.மு.க., சார்பில், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் 'விடியலை நோக்கி' எனும் பொதுக்கூட்டம் நடந்தது. கொரோனாவால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய தி.மு.க., நிர்வாகிகள், 30 பேர் மீது போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்தனர். பைக் திருடியவருக்கு சிறைகோவை சுங்கம் பை-பாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 37. கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் முன், மொபட்டை மர்மநபர் ஒருவர் திருட முயற்சிப்பதை கண்டார். அவரை பிடித்த பாலகிருஷ்ணன் ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் கோவை பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 22 எனத் தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதேபோல், கோவை புலியகுளம், அம்மன்குளத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பிரேமா, 39 வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். வாகனம் மோதி ஒருவர் பலிகோவை உப்பிலிபாளையம் வெங்கிடசாமி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன், 52. நேற்று முன்தினம் தனது மொபட்டில் பீளமேடு அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. துாக்கி வீசப்பட்ட மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைதுநகரின் பல்வேறு பகுதிகளில், போலீசார் நடத்திய சோதனையில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற, 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 214 குட்கா, பான்பராக் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X