கோவை:ரேஸ்கோர்ஸில் உள்ள, தாஜ் விவாண்டா ஓட்டலில், நவநாகரீக ஆடை அணிகலன்கள் கண்காட்சி, இன்று துவங்குகிறது; நாளை நிறைவடைகிறது.ைஹலைப் எக்ஸிபிஷன் நிர்வாக இயக்குனர் டோமினிக் கூறியதாவது:பேஷனில் புதுமை மற்றும் நவீனத்தை விரும்பும், கோவை மக்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், ைஹலைப் கண்காட்சி இன்றும் நாளையும், கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள, தாஜ் விவாண்டா ஓட்டலில் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை, நடக்கிறது.இக்கண்காட்சியில், நவநாகரீக ஆடை அணிகலன்கள், ஆபரணங்கள், பேஷன் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், ஸ்டேஷனரி மற்றும் பரிசு பொருட்கள், சொகுசு பொருட்கள், தனித்துவமான கலை பொருட்களும் விற்பனைக்குள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE