கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மதுரை:'திரையரங்குகளை, 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கும் உத்தரவை, தமிழக அரசு மறு பரிசீலனை செய்யும் என, நீதிமன்றம் நம்புகிறது. 'இடைக்காலமாக ஜன., 11 வரை, திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திரையரங்குகளை, 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர்கள்

மதுரை:'திரையரங்குகளை, 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கும் உத்தரவை, தமிழக அரசு மறு பரிசீலனை செய்யும் என, நீதிமன்றம் நம்புகிறது. 'இடைக்காலமாக ஜன., 11 வரை, திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திரையரங்குகளை, 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்யன், முத்துகுமார் மற்றும் மதுரை போனிபேஸ் ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.

'மல்டி பிளக்ஸ்' திரைஅரங்கு உரிமையாளர்கள் சங்கம் தரப்பு வழக்கறிஞர்: விமானங்களில், 200க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. அவற்றில், பயணியருக்கு அனுமதிக்கப்படுகிறது. கோவில் திருவிழாக்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. அதுபோல, திரையரங்குகளையும், 100 சதவீத இருக்கைகளுடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.திரையரங்குகளை நம்பி, ஒரு லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர்: திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட வழிகாட்டுதல் பிறப்பித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் டிச., 28ல் அனுப்பப்பட்டு உள்ளது. அது, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், தளர்வு கூடாது. 'இது, மத்திய அரசின் வழிகாட்டுதலை மீறுவதாக உள்ளது' என, தலைமை செயலருக்கு மத்திய உள்துறை செயலர் ஜன., 5ல் கடிதம் அனுப்பிஉள்ளார்.

மாநில அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்: இவ்விவகாரத்தில் மறு பரிசீலனை செய்யும் வாய்ப்பு குறித்து, அரசிடம் விபரம் பெற்றுத் தெரிவிக்க ஜன., 11 வரை அவகாசம் தேவை.

* நீதிபதிகள்: திரையரங்குகளை, 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்யும் என, இந்நீதிமன்றம் நம்புகிறது. இடைக்காலமாக ஜன., 11 வரை, திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

மேலும், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதை நீட்டித்தால், திரையரங்குகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய, கூடுதல் காட்சிகளுக்கு அனுமதிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் உள்ளதா என, தமிழக அரசு தரப்பில் ஜன., 11ல் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பிரபு என்பவரும், இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''இதேபோன்ற வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, வரும், 11ம் தேதி வரை, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை தொடர உத்தரவிட்டுள்ளது. ''கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருப்பதால், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது,'' என்றார்.

உடனே, தலைமை நீதிபதி, 'கொரோனா கட்டுக்குள் வந்தாலும், எண்ணிக்கை குறைந்தாலும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணி முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். 'கல்வி நிறுவனங்களை திறக்க, இன்னும் அனுமதிக்காத நிலையில், தியேட்டர்களில், 100 சதவீத அனுமதி சரியல்ல' என்றார்.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை, 50 சதவீத இருக்கைகளுடன், தியேட்டர்கள் இயங்கவும், மதுரை கிளையில் உள்ள வழக்குடன் சேர்த்து, இந்த வழக்கையும் விசாரிக்கவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


தியேட்டர்களில் 50 சதவீத அனுமதிதமிழக அரசு உத்தரவு

திரையரங்குகளில், 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயன்படுத்தி செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரைப்பட மற்றும் திரையரங்கு தொழிலாளர்கள் நலன் கருதி, திரையரங்குகள், 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட, அரசு அனுமதி அளித்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையை ஏற்றும், இதுதொடர்பான வழக்கு உள்ளதாலும், அனைத்து திரையரங்குகளிலும், மறு உத்தரவு வரும் வரை, 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட, அனுமதி அளிக்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருகிறது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X