பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கொடூரத்தால் மவுனமான இசை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
சென்னை மாநிலக் கல்லுாரி மாணவர்கள், 10 பேர் சேர்ந்து, 1987ம் ஆண்டு, கல்லுாரி மெல்லிசை குழு துவக்கினர். நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும், பலகுரல் கலைஞராகவும் லஷ்மன் இணைந்தார். இந்த குழு தான், இப்போது, 'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழுவாக வளர்ந்து, 34 ஆண்டுகளாக, தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும், இசை நிகழ்ச்சிகளில் வெற்றிக்கொடி கட்டி, வலம் வந்து கொண்டுள்ளது. ஆரம்ப காலத்தில்,

சென்னை மாநிலக் கல்லுாரி மாணவர்கள், 10 பேர் சேர்ந்து, 1987ம் ஆண்டு, கல்லுாரி மெல்லிசை குழு துவக்கினர். நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும், பலகுரல் கலைஞராகவும் லஷ்மன் இணைந்தார்.

இந்த குழு தான், இப்போது, 'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழுவாக வளர்ந்து, 34 ஆண்டுகளாக, தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும், இசை நிகழ்ச்சிகளில் வெற்றிக்கொடி கட்டி, வலம் வந்து கொண்டுள்ளது. ஆரம்ப காலத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளில் தான் கச்சேரி வாய்ப்பு கிடைத்துள்ளது. 'கோவில்களுக்கு, சைக்கிளில் சென்று எங்கள் குழுவின், விசிட்டிங்க் கார்டை உண்டியலில் போட்டு வருவேன்.'அதன் மூலம், கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் வந்தன' என, அந்தக்கால நினைவுகளை அசைபோட்டார், இக்குழுவின் நிர்வாக தலைவர் லஷ்மன். அவர் மேலும் கூறியதாவது:முதல் முறையாக, 1987ல், தொழில் ரீதியாக, எழும்பூர் மியூசியம் தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்து, கச்சேரி நடத்தினோம். மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன்பின், ஒரு மாதத்தில், 20 - 30 நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு பாடலை, எத்தனை முறை கச்சேரியில் வாசித்து, பாடி இருந்தாலும், நிகழ்ச்சி நடத்துவதற்கு முன் ஒரு முறை, 'ரிகர்சல்' செய்வோம். நிகழ்ச்சி இடையே மின்சார தடை, கருவிகள் பழுதடைதல் போன்ற பல பிரச்னைகளுக்கு இடையே தான் எங்கள் குழு வளர்ந்தது. வெளிநாடுகளுக்கு செல்லும் போது, விமானம் தாமதம் போன்ற எதிர்பாராத விஷயங்களால், பயண திட்டமே மாறி விடும். ஒரு முறை சேலம் நிகழ்ச்சிக்கு, மூன்று வேன்களில் பயணம் செய்தோம். அதில் நான் உட்பட குழுவினர் சென்ற வேன், மதுராந்தகம் அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

அதில் சென்ற அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். ஆனாலும் மற்ற, இரு வாகனங்களில் சென்றவர்களை வைத்து நிகழ்ச்சி நடந்தது.டி.எம்.எஸ்., ஜிக்கி, சுசிலா, பி.பி.எஸ்., யேசுதாஸ், எஸ்.பி.பி., ஜானகி போன்ற அனைத்து ஜாம்பவான்கள் முதல் தற்போதைய இளம் பாடகர்கள் வரை, 500க்கும் மேற்பட்ட பின்னனி பாடகர்கள் எங்கள் குழுவில் பாடியுள்ளனர்.ரசிகர்கள் எதிர்பார்ப்பு; பெரும்பலானவர்களின் ரசனைக்கு ஏற்ற பாட்டு; நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் எதை விரும்புவர்; எந்த வயதினருக்கு ஏற்ற பாடல் எது என, சின்ன சின்ன விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிடுவோம். அதற்கு கைத்தட்டல் கிடைக்கும் போது, மனதில் மகிழ்ச்சி நிறைந்தோடும்.நாங்கள், 1991ல், ஒரே மாதத்தில், 67 நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். இது தான் ஒரு மெல்லிசை குழு நடத்திய அதிகப்படியான நிகழ்ச்சி. இது வரை உள்நாடு, வெளிநாடு என, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியுள்ளோம். 'சென்னையில் திருவையாறு' என்ற பெயரில், டிசம்பர் இசை விழா நிகழ்ச்சியை, கடந்த, 14 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளோம். கர்நாடக சங்கீதம், நடனம், இசை வாத்திய கச்சேரி என, இவ்விழா ஒரு வாரம் நடக்கும்.கெரோனா காரணமாக, கடந்த டிசம்பரில், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி நடத்தவில்லை.

என் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர், மறைந்த என் சகோதரர் ராமன். ஒரு மெல்லிசை நிகழ்ச்சி நடத்த, 30 - 40 துறைளின் பங்களிப்பு உள்ளது.அனைவரையும் நிகழ்ச்சிக்கு முன் ஒருங்கிணைப்பது அவர் தான். நிகழ்ச்சிக்கு அரங்கை முன்பதிவு செய்வது முதல், வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கான பாஸ்போர்ட், விசா போன்ற, அனைத்து நிர்வாக விஷயங்களையும் கவனித்தார்.அத்துடன், இசை கருவிகள் விற்பனை மற்றும் சர்வீஸ், இசைப் பள்ளி போன்றவற்றையும் அவரே கவனித்து வந்தார்.ஒரே ஆண்டில், என் சகோதரர், எஸ்.பி.பி., யின் மரணம், கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் இசையே மவுனமானது போல, மனம் நொந்தேன். எல்லாரையும் போல, எங்கள் குழுவினரையும் கொரோனா முடக்கிப் போட்டது. மெல்லிசை நிகழ்ச்சியில் பங்குபெறும் இசை கலைஞர்கள், மேடை அமைப்பாளர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் என, அனைவரும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு தளர்வுக்கு பின், தற்போது, மாதம் இரண்டு, மூன்று நிகழ்ச்சி தான் நடக்கின்றன. தற்போது எங்கள் குழுவில், 40 இசை கலைஞர்கள் உள்ளனர். இந்த ஆண்டு நல்லவிதமாக அமையும் என, அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.வசூல் மன்னர்எஸ்.பி.பி., மெல்லிசை கச்சேரிகளின் வசூல் மன்னன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் நிகழ்ச்சி என்றால், விளம்பரதாரர்கள் கிடைப்பதும், டிக்கெட் விற்பனையும் மிக எளிது. எஸ்.பி.பி., எங்கள் குழுவுடன் இணைந்து, 300க்கும் மேற்பட்ட கச்சேரியில் பங்கேற்று இருக்கிறார். எஸ்.பி.பி.,யுடன், 2019ல் அமெரிக்க நிகழ்ச்சிகளுக்கு சென்றோம். சென்னையில் கிளம்பியது முதல் திரும்பி வரும் வரை, ஆறு விமான நிலையங்களில் ஏறி இறங்கி, 2,000 கி.மீ., பஸ் பயணம் என, எங்களின் பயணம் நீடித்தது. இந்த, 144 மணி நேர பயணத்தில், முழு நேரமும் எஸ்.பி.பி., எங்களுடனேயே இருந்தார். எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்சென்னையில், 1990ல் எம்.ஜி.ஆருக்காக, 'இதயக்கனிக்கு எங்கள் இதய அஞ்சலி' என்ற தலைப்பில் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு வெளியே, நுாற்றுக்கணக்கான சைக்கிள் ரிக் ஷாக்களில், எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் குவிந்தனர். அரங்கிற்கு வெளியிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.வெளிகுழுவில் இளையராஜாஇசையமைப்பாளர் இளையராஜா, அவரது சொந்த கச்சேரிகள், கங்கை அமரனின் இசை குழுவில் மட்டுமே பங்கேற்று வந்தவர். அவரை வைத்து, 2006ம் ஆண்டு ராயப்பேட்டையில், 'ஒன் மேன் ஷோ' என்ற நிகழ்ச்சி நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில், 34 பாடல்களையும் அவரே பாடினார். 25 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, இசை வரலாற்றில், எங்கள் குழுவிற்கு அவர் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X