பொது செய்தி

தமிழ்நாடு

சத்திரக்குடி வட்டத்தில் காய்ந்த நெற்பயிர்கள் ; விவசாயிகள் வேதனை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி வட்டத்தில் 500 ஏக்கரில் நெற்கதிர்கள் கருகியும், மழையால் சாய்ந்தும் உள்ளன.விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு பருவம் தவறி பலத்த மழை பெய்தது. சத்திரக்குடி பகுதிகளில் 12,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.தொடர்ந்து விதைக்கும் பொழுது மழை பெய்யாமல் இருந்ததால் ஆங்காங்கே

பரமக்குடி : பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி வட்டத்தில் 500 ஏக்கரில் நெற்கதிர்கள் கருகியும், மழையால் சாய்ந்தும் உள்ளன.

விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு பருவம் தவறி பலத்த மழை பெய்தது. சத்திரக்குடி பகுதிகளில் 12,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.தொடர்ந்து விதைக்கும் பொழுது மழை பெய்யாமல் இருந்ததால் ஆங்காங்கே பயிர்கள் கருகி வந்தன. பின்னர் புரெவி புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வந்தது.

இதனால் பாண்டிகண்மாய், கருங்குளம், கீழக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் பயிர்கள் சாய்ந்துள்ளன. 500 ஏக்கர் பரப்பளவில் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நிலங்களில் உழவு, விதைப்பு, களை எடுப்பு என ஆயிரக்கணக்கில் செலவு செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ஆனால் தொடர்ந்து வெயில் நீடிக்கும் நிலையில் பயிர்களை அறுவடை செய்ய முடியும் என, வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X