திருப்பூர்:கொரோனா காலகட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற மேலும் மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக மார்ச் 21ல் நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஜூன் 31 வரை முழு அளவில் ரயில் இயங்கவில்லை. அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடத்தில், சிறப்பு ரயில் மட்டுமே இயக்கப்பட்டது.மார்ச் 21 முதல், ஜூன், 31 வரை சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை ஆறு மாதம் அதாவது, (டிச., 31) வரை திரும்ப பெறலாம் என ரயில்வே அறிவித்து இருந்தது.இந்நிலையில், கட்டணம் திரும்ப பெறும் அவகாசத்தை மேலும் மூன்று மாதம் நீட்டித்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு மார்ச், 31 வரை முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறலாம்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மார்ச் 21 முதல், ஜூன் 31 வரையிலான காலகட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.முககவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளி கடைபிடித்து, ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையங்களில் கட்டணங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE