மாட்டு அம்மைக்கு ஆட்டு அம்மை ஊசி! அங்கீகாரம் இல்லாமலே போடப்படும் அவலம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
அவிநாசி;மாட்டு அம்மை நோய்க்கு, இதுவரை, தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்லடம், அவிநாசி பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமப்புறங்களில், சினை ஊசியாளர்களிடம், கால்நடை வளர்ப்போர் ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை வழங்குகின்றனர்.அவர்களை டாக்டர்கள் என்றே, கிராமப்புற மக்கள் கருதுகின்றனர். 'இது, சரியான அணுகுமுறையல்ல; அந்தந்த பகுதியில் உள்ள

அவிநாசி;மாட்டு அம்மை நோய்க்கு, இதுவரை, தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்லடம், அவிநாசி பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமப்புறங்களில், சினை ஊசியாளர்களிடம், கால்நடை வளர்ப்போர் ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை வழங்குகின்றனர்.அவர்களை டாக்டர்கள் என்றே, கிராமப்புற மக்கள் கருதுகின்றனர். 'இது, சரியான அணுகுமுறையல்ல; அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவர்களிடம் தான், கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டும்' என, கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.சில கால்நடை டாக்டர்கள், ஆட்டம்மை நோய்க்குரிய தடுப்பூசியை அம்மை தாக்கப்பட்ட மாடுகளுக்கு செலுத்துகின்றனர்; இதனால், நோய் கட்டுக்குள் வருவதாக கூறப்பட்டாலும், அரசு, இந்த சிகிச்சை முறைக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர். பரிமள் ராஜ்குமார் கூறியதாவது;ஒரே பகுதியில், 5க்கும் மேற்பட்ட மாடுகள் அம்மை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால், அது, நோய் கிளர்ச்சியாக கருதப்படுகிறது. அந்த அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில், நோய் கிளர்ச்சியாக கருதியே, மாடுகளுக்கான அம்மை நோயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.தடுப்பூசி இல்லாவிட்டாலும், அம்மை பாதித்த மாடுகளை, கால்நடை டாக்டர்களிடம் மட்டுமே காண்பித்து, உரிய நேரத்தில், சரியான முறையில் சிகிச்சை பெறுவது பலன் தரும்.மாவட்டத்தில், அம்மை நோயால் மாடுகள் இறப்பு நிகழவில்லை. மாட்டு கொட்டகைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X